இந்த புதிய வாரத்தின் துவக்கத்தில் உங்களுடன் இருப்பது நல்லது. வாழ்க்கை எனக்கு கற்றுத்தந்த உண்மைகளை பகிர்ந்துகொள்கிறேன். அந்த உண்மைகள், என் வாழ்க்கையில் வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே வித்தியாசத்தை ஏற்படுத்தியது. அது உங்களுக்கும் அப்படியே செய்யும்.

எனக்கு எழுதியவர்களுக்கு நன்றி சொல்லி ஆரம்பிக்கிறேன். நான் இந்தப் பேச்சை முடிப்பதற்கு முன், நீங்கள் எழுதக்கூடிய அஞ்சல் முகவரியை நாங்கள் உங்களுக்குத் தருகிறோம். உங்கள் தனிப்பட்ட தேவைகள், உங்கள் பிரச்சனைகள், உங்கள் ஜெப விண்ணப்பங்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ள தயங்காதீர்கள்.

கடந்த வாரம் முழுவதும், “தேவனுடைய வார்த்தை உங்களுக்கு என்ன செய்யும்” என்ற தலைப்பில் உங்களுடன் பகிர்ந்துகொண்டேன். இந்த வாரமும் ஒவ்வொரு நாளும் இந்த நேரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை, இந்த செழுமையும் அற்புதமுமான கருப்பொருளைத் தொடரப்போகிறேன்.

கடந்த வாரம் எனது இறுதிப் பேச்சில், தேவனுடைய வார்த்தை அவரது மருந்து பாட்டில் என்று பேசினேன். நமது முழு சரீரத்திற்கு சுகத்தையும் ஆரோக்கியத்தையும் கொண்டு வருவதற்கு அவர் வழங்கிய வழிமுறையாகும். நம் வாழ்வில் தேவனுடைய வார்த்தையின் குறிப்பிட்ட விளைவுகளை நான் இன்று கையாள விரும்புகிறேன், அதை நான் மன ஒளியூட்டம் என்று அழைப்பேன். இயற்கையான இயற்பியல் தளத்தில் ஒளி வேலை செய்கிறது போல தேவனுடைய வார்த்தை நம் மனங்களில் எப்படி வேலை செய்கிறது என்பதை நான் விவரிக்கப்போகிறேன்.

நான் திருப்ப விரும்பும் முதல் வேதவசனம் சங்கீதம் 119:130, அதில் சங்கீதக்காரன் கர்த்தரிடத்தில் சொல்கிறார்:

130 உம்முடைய வசனத்தின் பிரசித்தம் வெளிச்சம் தந்து, பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும்.

இங்கே, தேவனுடைய வார்த்தையிலிருந்து நாம் வெளிச்சத்தையும் புரிதலையும் பெற்றுக்கொள்ளலாம் என்று சங்கீதக்காரன் கூறுகிறார். தேவனிடமிருந்து மனிதன் விலகியிருப்பதன் மூலம் அவன் மனம் இருளடைந்துவிட்டது. தேவனுடைய வார்த்தையானது நுழையும்போது, ஒரு துளையிடும் ஒளிக்கதிர் அந்த இருளில் பிரகாசிப்பதுபோல் இருக்கும். இதுவரை இருள் நிலவிய இடத்தில் அது வெளிச்சத்தைக் கொண்டுவருகிறது, மேலும், அந்த வெளிச்சத்தின் மூலம் புரிதல் வருகிறது. மக்கள் மற்றும்

பொருட்களின் உண்மையான இயல்பையும் தன்மையையும் வெளிச்சமானது நமக்கு காண்பிக்கிறது. நாம் சரியான மதிப்பீடுகளை செய்ய முடியும். நாம் இருளில் இருக்கும்போது, நாம் எதை கையாளுகிறோம் என்று உண்மையாக நமக்கு தெரியாது. நாம் தடுமாறுகிறோம், சில நபர்களை அல்லது சில விஷயங்களைப் பற்றி நாம் அறிந்திருக்கிறோம், ஆனால் அவர்களின் உண்மையான இயல்பும், தன்மையும் நமக்குத் தெரியாது. தேவனுடைய வார்த்தையே வெளிச்சத்தைத் தருகிறது, நம் வாழ்வில் நாம் கையாள வேண்டிய உண்மையான காரணிகளையும், அவற்றை எப்படி கையாள வேண்டும் என்றும் நமக்கு காண்பிக்கிறது.

புரிதல் அல்லது ஞானத்திற்கும் கல்விக்கும் இடையே ஒரு முக்கியமான வேறுபாடு உள்ளது. கிழக்கு ஆப்பிரிக்காவில் ஐந்து வருடங்களாக கல்வி பணியில் ஈடுபட்டு வந்தேன், அங்கே ஆப்பிரிக்கா பள்ளிகளுக்கான ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுத்து வந்தேன். என் மாணவர்களிடம், “ஆப்பிரிக்கர்களாகிய நீங்கள் மரம் மற்றும் கல்லால் செய்யப்பட்ட உங்கள் பழைய கடவுள்களை விட்டுவிட்டீர்கள் ஆனால் புதிய கடவுளைக் கொண்டுள்ளீர்கள்” என்று வேடிக்கையாக சொல்வதுண்டு. “நான் அவர் பெயரைச் சொல்ல வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களா?” என்று சொன்னேன். நிச்சயமாக, என அவர்கள் தலையசைத்தார்கள். “சரி, அவரது பெயர் அலிமு” என்று சொல்வேன். அது சுவாஹிலி மொழியில் உள்ளது. உங்களுக்கு அலிமு என்றால் என்ன தெரியுமா? சரி, அதற்கு கல்வி என்று அர்த்தம். அந்த நேரத்தில் ஆப்பிரிக்க மக்களின் உண்மையான நிலைமை அப்படி தான் இருந்தது. வெள்ளையர்கள் பல காரியங்களை செய்து முடிக்கின்றதையும், அவர்களால் அவற்றை செய்யவும், சாதிக்கவும், வாழ்க்கையை எளிதாக்கவும் முடியவில்லை என்பதாக அவர்கள் கண்டார்கள். மேலும், அவர்கள் இப்படி சொல்வதுண்டு, “வெள்ளையர்களுக்கும் நமக்கும் இடையில் என்ன வித்தியாசம் உள்ளது?”, “வெள்ளையர்களுக்கு கல்வி இருக்கிறது, நமக்கு இல்லை. நமக்கும் கல்வி இருந்திருந்தால் நாமும் அப்படியே செய்திருப்போம்” என்ற பொதுவான முடிவுக்கு அவர்கள் வந்தார்கள். அதனால் அவர்கள் கல்விக்கு பின்னால் மிகவும் தீவிரமாக பாடுபடுவார்கள். கல்வியை அடைவதற்கு அவர்கள் மிகப்பெரிய தனிப்பட்ட தியாகங்களை செய்வார்கள். ஒரு குறிப்பிட்ட விதத்தில், கல்வியை அவர்கள் சரியாக மதிப்பீடு செய்யவில்லை என்று நான் கண்டேன். அது அவர்களுக்காக எல்லாவற்றையும் செய்யும் என்று அவர்கள் நினைக்கிறார்கள், அவர்கள் ஏமாற்றம் அடையப்போகிறார்கள். அதனால், நீங்கள் கல்விக்காக பாடுபடுகிறீர்கள் ஆனால் நீங்கள் ஞானத்தையும் பெறுகிறீர்களா? என்ற தலைப்பில் நான் ஒரு சிறிய துண்டுப்பிரசுரம் எழுதினேன், இது அந்த நேரத்தில் அந்த பகுதியில் பரவலாக பரப்பப்பட்டது. அந்த துண்டுப்பிரசுரத்தில், கல்விக்கும் ஞானத்துக்கும் இடையில் ஒரு பெரிய வித்தியாசம் இருக்கிறது என்பதை அங்கே நான் சுட்டிக்காட்டினேன். உண்மையில், நான் ஒரு சர்ச்சைக்குரிய அறிக்கையை வெளியிட்டேன். நான் சொன்னேன், “உலகின் பெரும்பாலான பிரச்சனைகள் படித்த முட்டாள்களால் ஏற்படுகிறது”. மிகவும் படித்தவராக இருந்தும் மிகவும் முட்டாள்தனமாக இருக்க முடியும். மேலும் அவர்களுக்காக நான் இந்த ஒப்புமையை வரைந்தேன். நான் சொன்னேன், “ஒரு படித்த மனம் ஒரு சிறந்த விஷயம். அது ஒரு கூர்மையான கத்திப் போன்றது. அது ஒரு அற்புதமான கருவியாகும், ஆனால் அந்த கூர்மையான கருவி நல்ல அல்லது தீய நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படலாம்.” ஒரு மனிதன் அந்த கத்தியை எடுத்து, வெட்டி தன் குடும்பத்துக்காக உணவு தயாரிக்க முடியும், வேறொரு மனிதன் அதே கூர்மையான கத்தியை எடுத்து தனது பக்கத்து வீட்டாரை அல்லது தன்னையே கொலை செய்ய முடியும். அந்த கத்தியில் தவறு ஏதுமில்லை. இது பயன்படுத்தப்படும் பயன்பாட்டைப் பொறுத்ததாகும். கல்வியும் அப்படித்தான். இது கத்தியைப் போன்றது, ஆனால் கத்தியை சரியாகப் பயன்படுத்த ஞானம் தேவை.

முன்னாள் அமெரிக்க அதிபர், தியோடர் ரூஸ்வெல்ட் ஒருமுறை இதை சொன்னார்: அவர் சொன்னார், “ஒரு மனிதன் திருடனாக இருந்தால், அவன் ஒரு இரயில் வண்டியைத் திருடலாம், ஆனால் நீங்கள் அதே மனிதனை கற்பித்தால், அவன் முழு இரயில் பாதையையும் திருடிவிடுவான்.” சரி, அது இன்னும் ஒரு இழிவான கருத்தாகும், ஆனால் அதில் ஒரு பெரிய உண்மை இருக்கிறது. படிப்பறிவில்லாத திருடனைக் காட்டிலும் படித்த திருடன் மிகப்பெரிய ஆபாத்தான மனிதனாயிருக்கிறான். நான் உங்களுக்கு என்ன சொல்கிறேன் என்றால் வெளிச்சத்திற்கு மாற்று ஒன்றுமில்லை. நமது மனங்களில் வெளிச்சத்தின் ஒரே ஆதாரம் தேவனுடைய வார்த்தையாகும்.

மீண்டும், என் மனம் கிழக்கு ஆப்பிரிக்காவிற்கு செல்கிறது. சில நேரங்களில் இதை வைத்து என் மாணவர்களுக்கு சவால்விடுவேன். கற்பிக்கிம் அறையில் நான் அவர்களிடம் சொல்வேன், “இப்போது இந்த அறை முழுவதும் இருட்டாக இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம், இருளில் இருந்து எப்படி விடுபடுவோம்? நாம் அனைத்து கதவுகளையும் ஜன்னல்களையும் திறந்து காற்று இருளைப் போக்கட்டும் என்போமா?” நிச்சயமாக, அவர்கள் “இல்லை” என்பார்கள். சரி, நான் சொல்வேன், “நாம் காணும் அனைத்து விளக்குமாறுகளையும் அனுப்பி இருளை துடைத்துவிட முடியுமா? அவர்கள் என்னைப் பார்த்து சிரிப்பார்கள். “நல்லது, அப்புறம்”, “இருளை எப்படி அகற்றுவது?” என்று நான் அவர்களிடம் சொல்வேன். சில மாணவர்கள் கையை உயர்த்துவார்கள். “சொல்லுங்கள்?” என்று கூறும்போது. “மின் விளக்கைப் போடவும்” என்பான். “மிகவும் சரியானது” என்பேன். நீங்கள் வெளிச்சத்தைப் பெறும்போது, இருளைக் குறித்த எந்த பிரச்சனையும் உங்களுக்கு இருக்காது, வேறு எதுவும் இல்லை, வெளிச்சமானது இருளை சமாளித்துவிடும். அதுப் போல, வேறொன்றுமில்லை, தேவனுடைய வார்த்தையே நமது மனங்களில் உண்மையான வெளிச்சத்தையும், பிரகாசத்தையும் கொண்டு வரும், நமது இருளை அகற்றும், உண்மையான காரியங்கள் என்ன என்பதையும், எப்படி கையாள்வது என்பதையும் நமக்கு காண்பிக்கும்.

நான் இப்போது எபேசியர் 5:8-11 இல் உள்ள பவுலின் வார்த்தைகளுக்கு திரும்புகிறேன், அதில் தேவனுடைய வார்த்தைகளால் பிரகாசிக்கப்பட்ட விசுவாசிகளுக்கு அவர் அங்கே பேசுகிறார். அவர் இதை சொல்கிறார்:

8 முற்காலத்தில் நீங்கள் அந்தகாரமாயிருந்தீர்கள், இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள்; வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள். 9 ஆவியின் கனி, சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும். 10 கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்துப்பாருங்கள். 11 கனியற்ற அந்தகாரக் கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்துகொள்ளுங்கள்.

பவுல் இங்கே சொல்கிறார், ஒரு காலத்தில் உங்கள் மனம் இருளாயிருந்தது. ஆனால் தேவனுடைய வார்த்தையை நீங்கள் பெற்றபோது, அது உங்கள் மனதில் இருக்க அனுமதித்தீர்கள், அப்போது நீங்கள் வெளிச்சமானீர்கள், இதன் விளைவாக, கனியானது உங்கள் வாழ்க்கையிலிருந்து வெளிப்பட்டது – முடிவுகள், நன்மையின் விளைவுகள். சகல நற்குணத்திலும், நீதியிலும் உண்மையிலும் ஆவியின் கனி இருக்கிறது என்று அவர் சொல்கிறார். கவனியுங்கள், வெளிச்சமானது நல்ல கனியை கொண்டு வருகிறது. அது நம் வாழ்க்கையை மாற்றுகிறது. மேலும், நம்மை நன்மை தரும் காரியங்களை செய்ய வைக்கிறது; அது நமக்கு மட்டுமல்ல ஆனால் பிறருக்கும் நன்மையைத் தருகிறது. மறுபுறம், பவுல் இருளின் கனியற்ற செயல்களைக் குறித்தும் பேசுகிறார். இருளுக்கு எந்த நல்ல கனியும் இல்லை. அதன் முடிவுகளும் விளைவுகளும் தீங்கானவை.

மீண்டுமாக, பிலிப்பியர் 1:9-11 இல் பவுல் பிலிப்பி பட்டணத்தின் கிறிஸ்தவர்களுக்காக எவ்வாறு ஜெபிக்கிறார் என்பதைக் குறித்து பேசுகிறார். அவர் இதை சொல்கிறார்:

9 மேலும், உத்தமமானவைகளை நீங்கள் ஒப்புக்கொள்ளத்தக்கதாக உங்கள் அன்பானது அறிவிலும் எல்லா உணர்விலும் இன்னும் அதிகமதிகமாய் பெருகவும், 10 தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும்படி இயேசுகிறிஸ்துவினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாகி, 11 நீங்கள் கிறிஸ்துவின் நாளுக்கென்று துப்புரவானவர்களும் இடறலற்றவர்களுமாயிருக்கவும் வேண்டுதல் செய்கிறேன்.

நாம் தேவனுடைய வார்த்தைக்கு நம்மை வெளிப்படுத்தும்போது, நமது மனங்களில் அந்த வார்த்தையின் விளைவு என்னவென்றால், நம்மை அறிவிலும் எல்லா உணர்விலும் இன்னும் அதிகமதிகமாய் பெருகச் செய்ய உதவுகிறது. எது சிறந்தது என்பதை நாம் அறிய முடிகிறது. அல்லது மற்றொரு மொழிபெயர்பு சொல்கிறது, “வித்தியாசமான காரியங்களை பிரித்து அறிய முடிகிறது”. வெளிச்சமானது இந்த நுட்பமான இன்னும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளை வெளிப்படுத்துகிறது; எது சரியாகத் தோன்றும், எது நன்மை உண்டாக்கும், எது உண்மையில் நமக்கு நல்லது செய்யும் என்பதை வெளிப்படுத்துகிறது. வெளிச்சமானது கனியை கொண்டு வருகிறது என்று பவுல் மீண்டும் வலியுறுத்துகின்றார். இயேசு கிறிஸ்துவின் மூலமாக வருகிற நீதியின் கனியைக் குறித்து அவர் பேசுகிறார். எனவே, தேவனுடைய வார்த்தையால் நம் மனங்கள் பிரகாசமடைந்த போது, எது நன்மையானது என்றும், வருகிறதான தேவனுடைய சித்தம் என்னவென்றும் அறிந்துகொள்ளும் உணர்வு அதிகரிக்கிறது.

என்னுடைய வாழ்க்கையில், என்னுடன் தேவனின் கையாளுதல் பற்றி நான் நினைக்கிறேன். இயேசு கிறிஸ்துவானவர் தன்னை எனக்கு வெளிப்படுத்தினார், என் இதயத்தில், என் வாழ்க்கையில் வந்து என்னை அற்புதமாக மாற்றினார். அந்த நேரத்தில், நான் பிரிட்டிஷ் ராணுவ வீரனாக பணியாற்ற நேர்ந்தது, பெரும்பாலான வீரனைப் போல, இன்று அதை சொல்வதற்கு நான் வருந்துகிறேன், எனது பேச்சு அசுத்தமாகவும் அவதூறாகவும் இருந்தது. கிறிஸ்துவானவர் வந்த கணத்தில் அது மாறினது; அசுத்தமான அல்லது அவதூறான பாஷையை நான் ஒருபோதும் பயன்படுத்தியதில்லை. நான் நினைத்தேன், “அற்புதமானது, இப்போது நான் நன்றாக இருக்கிறேன்.” ஆனால், எக்காரணத்தை கொண்டும் அது முடிவல்ல.

சிறிது காலத்திற்கு பின், என் வேதத்தை நான் படிக்க ஆரம்பித்தேன், தேவன் எனது பேச்சின் பிற பகுதிகளைக் கையாண்டார். மிகைப்படுத்தி பேசியதில் நான் குற்றவாளியாக இருந்தேன் என்பதை அவர் காண்பித்தார். நான் பெரும்பாலும் இயல்பை விட மிகைப்படுத்தி பேசுவேன். அவர் வேதத்தில், “உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்” என்று சொல்லப்பட்டதை எனக்குக் காண்பித்தார். நீங்கள் உண்மையில் என்ன சொல்ல வேண்டுமென்று இருக்கிறீர்களோ அதை விட அதிகமாக எதுவும் சொல்ல வேண்டாம், இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும். எனவே, தேவன் மிகைப்படுத்தலை கையாண்டார். நான் நினைத்தேன், “அற்புதம், நான் உண்மையில் முன்னேற்றம் அடைகிறேன்,” அதன் பின், நான் இரக்கமற்ற விமர்சன பேச்சை பயன்படுத்திய குற்றவாளியாக இருந்தேன் என்பதை தேவன் எனக்கு காண்பித்தார். தேவன் அதை கையாண்டார். “நான் உண்மையில் இப்போது மிகவும் அற்புதமான ஆவிக்குரிய முன்னேற்றம் அடைகிறேன்,” என்று நான் நினைத்தேன், அதன் பின்னர், நான் பலமுறை எதிர்மறை அறிக்கைகளுக்கு பதில் பேசுவேன் என்பதை தேவன் எனக்கு காண்பித்தார். உறுதியாக இருந்து தேவனுக்கு மகிமை செலுத்துவதற்கு பதிலாக, என் அவிசுவாசத்தில் கட்டப்பட்டேன். பின்னர் நான் அவற்றை ஏறத்தாழ கைவிட்டேன், அதன் பின்பு தேவன் எனக்கு நேர்மறையானவற்றை காண்பித்தார். அவர் சொன்னார், நடைமுறையில், “என்னை மகிமைப்படுத்துவதற்காக உன் வாயில் உனக்கு நாவைக் கொடுத்திருக்கிறேன், மேலும், உன் நாவால் என்னை மகிமைப்படுத்தாத எதுவும் தவறான பயன்பாடாகும்.” எனவே ஒரு சவால் இருக்கிறது – வெளிச்சம் வருகிறது. அதற்கு நாம் என்ன செய்ய போகிறோம்? யோவான் 3 இல் இயேசு மிக தெளிவாக அந்த சவாலை வெளிப்படுத்துகிறார்:

19 ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது. 20 பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான். 21 சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்றார்.

எனவே, வெளிச்சத்திலிருந்து மறைந்து கொள்ளவோ அல்லது வெளிச்சத்துக்கு வந்து, அவ்வெளிச்சத்துக்கும் தேவனுடைய வார்த்தையின் சத்தியத்துக்கும் முன்னால் உங்களை வெளிப்படுத்திக் கொள்வதோ இவ்விரண்டில் நீங்கள் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம்.

இப்போது நம் நேரம் இன்றைக்கு முடிந்துவிட்டது. நாளையதினம் நான் உங்களுடன் மீண்டும் வருவேன். “தேவனுடைய வார்த்தை உங்களுக்கு என்ன செய்யும்” என்ற தலைப்பில் நான் தொடர்ந்து பேசுவேன். தேவனுடைய வார்த்தையை அறிந்து அதை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் பாவத்தின் மீதும் சாத்தானின் மீதும் உண்மையான வெற்றியை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பதைப் பற்றி நான் விவரித்துப் பேசுவேன்.