நம் வாழ்வை அர்ப்பணித்தல்

டெரெக் பிரின்ஸ்
Published: 1979
Last Updated: செப்டம்பர் 2026
Read Time: 9
திருமணத்தின் அர்ப்பணிப்பை ஆராய்ந்து, இந்தப் பரிசுத்த இணைப்பை ஒரு உடன்படிக்கையாகப் பார்ப்பது உங்கள் உறவை எவ்வாறு மாற்றும் என்பதைக் கண்டறியுங்கள். 'வெற்றிகரமான திருமணத்திற்கான திறவுகோல்' தொடரிலிருந்து டெரெக் பிரின்ஸின் 'நமது ஜீவனைக் கொடுத்தல்' என்ற பிரசங்கத்தைக் கேளுங்கள். தியாகத்தின் முக்கியத்துவம் மற்றும் விசுவாசமான உறவுகளை உருவாக்குவதில் அதன் பங்கு பற்றி வேதத்திலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்.
Transcript
நேற்று வெற்றியுள்ள திருமணத்திற்கான திறவுக்கோலை குறித்து உங்களுடன் பேசினேன். திருமணம் ஒரு உடன்படிக்கை என்பதே. வேதம் வெளிப்படுத்தும் திறவுக்கோலாகும். அடிப்படையாக இது இரண்டு அர்த்தங்கள் கொண்டது: இதற்கு முதலாவது அர்த்தம், அர்ப்பணிப்பு என்பதாகும். அர்ப்பணிப்பு இல்லாமல் உடன்படிக்கை இல்லை. திருமணம் ஒரு சோதனை செய்து பார்த்தல் அல்ல. அது அர்ப்பணிப்புடன் ஆரம்பமாகிறது. அர்ப்பணிப்பை கடந்து போகிறவர்கள். திருமணத்திற்கு தேவன் வைத்திருக்கும் திட்டத்தை கண்டடைய முடியாது.
இரண்டாவதாக, உடன்படிக்கையில், தேவனே நிபாந்தனைகளை ஏற்படுத்துகிறார். ஒரு திருமணம் எப்படி அமைய வேண்டும் என்பதை மனிதன் தீர்மானிக்க அவர் விட்டுவிடுவதில்லை. அவரே சில குறிப்பிட்ட எளிய நிபந்தனைகளை ஏற்படுத்தினார்.
ஆகவே இந்த கருப்பொருளை இன்று நான் தொடர போகிறேன். உடன்படிக்கையை குறித்து புரிந்துக்கொள்வது. திருமணத்தில் எப்படி வெற்றி மற்றும் தோல்விக்கு இடையில் ஒரு வித்தியாசத்தை உண்டுப்பண்ண முடியும் என்பதற்கு, செயல்முறை விளக்கம் அளிக்க போகிறேன். குறிப்பாக உங்கள் திருமணத்தில் இதை எப்படி செய்வது?
உடன்படிக்கை மற்றும் ஏற்பாடு என்ற வார்த்தைகள், வேதாகமத்தின் முழு வெளிப்பாட்டிலும் மிகுந்த முக்கியத்துவம் பெற்றவை. வேதாகமம் நமக்கு இரண்டு ஏற்பாடுகள க கொடுக்கப்பட்டுள்ளது. பழைய மற்றும் புதிய ஏற்பாடுகள். ஏற்பாடு என்று மொழிப்பெயர்க்கப்பட்டுள்ள வார்த்தை, அநேக இடங்களில் உடன்படிக்கை என்று மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. ஆகவே, ஒரு ஏற்பாடு எப்போதுமே ஒரு உடன்படிக்கை என்றூம், ஒரு உடன்படிக்கை எப்போதுமே ஒரு ஏற்பாடு என்றும், நாம் நினைவில் கொள்ள வேண்டும். சில வேளைகளில் மொழிப்பெயர்ப்புகள் இந்த உண்மையை மறைத்து விடுகின்றன.
வேதகமத்தில் உடன்படிக்கையை குறித்த அடுத்த உண்மை என்னவெனில், அதற்கு எப்போதுமே பலி அவசியமாக இருந்தது. ஒரு பலியில்லாமல், உடன்படிக்கை செய்ப முடியாது. அப்படி பலியிடும் போது, ஒரு ஜீவன் எடுக்கப்பட்டது. அல்லது அந்த ஜீவன் விட்டுக்கொடுக்கப்பட்டது. பழைய ஏற்பாட்டில், உடன்படிக்கைக்குள் பிரவேசிக்க, மக்கள் செய்த ஒரு விசித்திரமான சடங்கு இருந்தது. அவர்கள் பலியிடுவதற்கு விலங்குகளை எடுத்து, அவைகளை வெட்டி. இரண்டு பாகங்கள க அறுத்து, அந்த இரண்டு பாகங்களை ஒன்றுக்கு எதிராக மற்றொன்றை வைத்து, அந்த இரண்டிற்கும் இடையில் நடந்து போவார்கள். ஆதியாகமம் 15ல் இதை குறித்த மிக சுவாரசியமான ஒரு உதாரணம் உண்டு. இங்கு ஆண்டவர் தாமே. ஆபிரகாமுடன் உடன்படிக்கை செய்தார்.
இந்த வாரத்தில், பிறபாடு, அதை குறித்து பேசபோகிறேன். ஆனால் இப்போது, இதை மட்டும் புரிந்துக்கொள்ளுங்கள்: உடன்படிக்கை ஒரு பலியை சார்ந்தது. யாருடன் உடன்படிக்கை செய்கிறீர்களே, அவர்களுடன் பலியின் நடுவே நடந்து செல்லும் போது, நீங்கள் உடன்படிக்கைக்குள் பிரவேசிக்கிறீர்கள். வேறு வார்த்தைகளில் சொன்னால், உடன்படிக்கைக்குள் பிரவேசிக்கும் வழி. தியாகம் செய்பப்பட்ட ஜீவனின் ஊடாக செல்வது தான். அந்த பலி, இதைத்தான் குறிப்பிடுகிறது.
இது வெறும் பழைய ஏற்பாட்டிற்கு மட்டுமே பொருந்தும் என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் அப்படி அல்ல. ஏனென்றால், புதிய ஏற்பாட்டில், எபிரெயர் எழுத்தாளர் அப்புத்தகத்தின் 9ம் அதிகாரம். 16 17 வசனங்களில், இதை உறுதி செய்து எழுதுகிறார். அவர் இப்படியாக கூறுகிறார்:
ஏனென்றால், எங்கே மரணசாதனமுண்டோ, அங்கே அந்தச் சாதனத்தை எழுதினவனுடைய மரணமும் உண்டாகவேண்டும் எப்படியெனில், மரணமுண்டான பின்பே மரணசாதனம் உறுதிப்படும்; அதை எழுதினவன் உயிரோடிருக்கையில் அதற்குப் பெலனில்லையே.
இது, அதிர்ச்சியூட்டும் ஒரு வாக்கியம் என்றே சொல்லுவேன். உடன்படிக்கை செய்தவர், மரித்தால் தான் அந்த உடன்படிக்கை செயற்பாட்டில் வரும் அல்லது செல்லுபடியாகும்.
இயேசுவின் மரணம், கிறிஸ்தவர்கள கிய நமக்கு மா பெரும், இறுதி பலியாக இருக்கிறது. புதிய ஏற்பாட்டில், அநேக பகுதிகள் இதை குறித்து பேசுகின்றன. உதாரணத்திற்கு, 2 கொரிந்தியர் 5 ம் அதிகாரம். 14 15 வசனங்களில், பவுல் கூறுகிறார்:
கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது; ஏனென்றால், எல்லாருக்காகவும் ஒருவரே மரித்திருக்க, எல்லாரும் மரித்தார்கள் என்றும் பிழைத்திருக்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல், தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி, அவர் எவ்வாருக்காகவும் மரித்தாரென்றும் நிதானிக்கிறோம்.
வேறு வார்த்தைகளில் சொன்னால், நம்முடைய சார்பாக இயேசு மரித்த மரணமே புதிய உடன்படிக்கை நிலைநிற்பதற்கு ஏதுவான பலியாக இருக்கிறது. அவருடைய மாணத்தை நாம் விசுவாசத்துடன் ஏற்றுக்கொள்ளும் போது, அது நம்முடைய மரணமாக மாறுகிறது. ஒருவர் எல்லாருக்காகவும் மரித்தார். ஆகையால் நாம் எல்லாரும் மரித்தோம்.
இயேசு தமக்காக மரிக்கவில்லை, அவர் நமக்காக மரித்தார். அவர் நம்முடைய பிரதிநிதியாக மரித்தார். அவருடைய மரணம் நம்முடைய மரணமாக மாறுகிறது. ரோமர் 6ம் அதிகாரம். 8 11 வசனங்களில் பவுல் கூறுகிறார்:
ஆகையால், கிறிஸ்துவுடனே கூட நாம் மரித்தோமானால், அவருடனேகூடப் பிழைத்தும் இருப்போம் என்று நம்புகிறோம். மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து இனி மரிப்பதில்லையென்று அறிந்திருக்கிறோம்; மரணம் இனி அவரை ஆண்டுக்கொள்வதில்லை. அவர் மரித்து, பாவத்திற்கென்று ஒரேதரம் மரித்தார்; அவர் பிழைத்திருக்கிறது, தேவனுக்கென்று பிழைத்திருக்கிறார். அப்படியே நீங்களும், உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்கள் சுவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்கள லவும் எண்ணிக்கொள்ளுங்கள்.
இயேசு கிறிஸ்துவின் மரணத்தை குறித்த அடிப்படை போதனை என்னவென்றால், அவர் பாவத்திற்கான கடைசி மற்றும் இறுதி பலியாக இருந்தார். அவருடைய மரணம் நம்முடைய சார்பாக நிகழ்ந்தது. அவர் நமக்காக மரித்தார். ஆகவே நாம் புதிய உடன்படிக்கைக்குள் பிரவேசிக்கிறோம். பலியிடப்பட்டு, இரண்டு பக்கம் கிடத்தியிருக்கும் விலங்குகளின் சரீர பாகங்களின் ஊடாக கடந்து போவதினால் அல்ல, மாறாக நமது சார்பாக மரித்த இயேசு கிறிஸ்துவின் மரணம் மூலமாகவே. ஆனால், நமது சார்பில் அவர் மரித்ததை நாம் ஏற்றுக்கொண்டால் மட்டுமே. இந்த உடன்படிக்கை செல்லுபடியாகும். உடன்படிக்கை செய்பவர் உயிரோடிருக்கும் வரை, அது செல்லுபடியாகாது. நம்முடன் உடன்படிக்கை செய்பவே இயேசு மரித்தார். ஆனால் நாம் அவருடன் மரித்தோம் என்று எண்ணிம்போது தான், உடன்படிக்கை செல்லுபடியாகிறது. அவருடைய மரணம் நம்முடைய மரணமாக மாறுகிறது. புதியகுடன்படிக்கைக்குள் நாம் பிரவேசிக்க, அவரே பலியாக இருக்கிறார்.
இந்த உடன்படிக்கையின் கோட்பாடு, திருமணத்திற்கு எப்படி குறிப்பாக பயன்படுத்தப்படும்? உடன்படிக்கை செய்தவர் மரித்தாலொழிய உடன்படிக்கை செல்லுபடியாகாது என்று கூறினோம். ஆகவே, ஒரு ஆணிக்கும் பெண்ணிக்கும் இடையிலான உடன்படிக்கை அல்லது கணவன் மனைவி இடையிலான உடன்படிக்கை என்றால், அது எப்படி செயல்படும்? அடிப்படையான கோட்பாடு என்னவென்றால், கிறிஸ்தவர்களுக்கான திருமண உடன்படிக்கை, இயேசுவின் மரணத்தை சார்ந்ததாக இருக்கிறது. அவருடைய மரணம் நம்முடைய மரணமாக இருந்தது. அவர் மூலமாகவே நாம் இந்த உடன்படிக்கைக்குள் பிரவேசிக்கிறோம். இது குறிப்பாக திருமணம் என்னும் உடன்படிக்கைக்கு உண்ணமபகும்.
திருமண உடன்படிக்கைா என்ற தலைப்பை கொண்ட எனது ஆங்கில புத்தகத்தில், இதை மிக தெளிவாக நான் விளக்கியுள்ளேன் ஆகையால் அப்புத்ங்கத்தின் சில பத்திகளை நான் இங்கு மொழிப்பெயர்த்து வாசிக்கிறேன். நான் சொல்ல விரும்புவதை மிக தெளிவாக சொல்ல இது உதவும். ஆகையால் என் புத்தகத்திலிருந்து இப்போது வாசிக்கிறேன்.
கிறிஸ்தவ திருமணம் என்ற உடன்படிக்கை, நமது சார்பாக, சிலுவையில் ஏற்பட்ட இயேசு கிறிஸ்துவின் மரணத்தையே அடிப்படையான பலியாக கொண்டுள்ளது. அவரே பலியாக இருக்கிறார். தேவனே தீர்மானித்த படி, விசுவாசத்தினால் ஒரு புருஷனும், ஸ்திரியும் அதின் வழியாகவே திருமண உறவுக்குள் பிரவேசிக்கின்றனர். தேவனும், ஆப்ராமும் கொள்ளப்பட்ட விலங்குகளின் நடவே கடந்து போனது போல, அப்படியே திருமணத்தில், ஒரு புருஷனும், ஸ்திரியும் தங்கள் சார்பில் ஏற்பட்ட இயேசு கிறிஸ்துவின் மரணத்தின் வழியாக ஒரு முற்றிலும் புதிய வாழ்விற்குள்ளும், உறவிற்குள்ளும் கடந்து செல்கின்றனர். இயேசுவின் மரணமில்லாமல் இது சாத்தியமற்றது. கிறிஸ்தவ திருமணத்தின் உடன்படிக்கை, சிலுவையின் அண்டையில் செய்யப்படுகிறது. இந்த உறவின் செயல்பாட்டில் மூன்று பகுதிகள் உள்ளன. முதலாவது ஒரு ஜீவன் அர்பணிக்கப்படுகிறது. ஒருவர் மற்றொருவருக்காக ஜீவனை அர்ப்பணிக்கின்றார். கணவன், கிறிஸ்துவின் சிலுவை மரணத்தை திரும்பி பார்த்து, அந்த மரணம் என்னுடைய மரணம். நான் சிலுவையின் வழியாக வந்த போது, நான் மரித்தேன். இப்போது, நான் எனக்காக வாழவில்னலா என்று கூறுகிறார். அதே போல, மனைவியும் சிலுவையை பார்த்து, இதையே கூறுகிறாள்: அந்த மரணம் என்னுடைய மரணம். நான் சிலுவையின் வழியாக வந்த போது, நான் மரித்தேன். இப்போது, நான் எனக்காக வாழவில்லை.ா அந்த நொடியிலிருந்து, ஒருவர் மற்றவரிடமிருந்து எதையும் விலக்குவதில்லை. கணவனுடையதெல்லாம். மனைவிக்கு உரியதாக மாறுகிறது. மனைவினுடையதெல்லாம். கணவனுக்கு உரிபதாக மாறுகிறது. எந்த தடையும் இல்லை. எதுவும் விலக்கப்படுவதும் இல்லை. இது ஒரு இணைப்பு அல்லது ஒன்றுப்படுதல் ஆகும். ஒரு கூட்டுப்பங்காண்மை அல்ல. இரண்டாவதாக. அந்த மரணத்திலிருந்து ஒரு புது ஜீவன் உண்டாகிறது. அந்த புதிய ஜீவனை ஒருவர். மற்றொருவருக்குள் மற்றும் மற்றொருவர் மூலமாக வாழ்கிறார். கணவன் மனைவியை பார்த்து. என் வாழ்க்கை உன்னில் தான் இருக்கிறது. என் வாழ்வை நான் உன் மூலம் வாழ்கிறேன். நான் என்னவாக இருக்கிறேன் என்பதின் வெளிப்பாடாக நீ இருக்கிறாய் என்று கூறுகிறார். அதே போல், மனைவி கணவனிடம்: என் வாழ்க்கை உங்களில் தான் இருக்கிறது. என் வாழ்வை நான் உங்கள் மூலம் வாழ்கிறேன். நான் என்னவாக இருக்கிறேன் என்பதின் வெளிப்பாடாக நீங்கள் இருக்கிறீர்களா என்று கூறுகிறார். முன்றாவதாக, அந்த உடன்படிக்கை சரீரப்பிரகாரமான ஒன்றுப்படுதலினால் முழுமை அடைகிறது. ஒருவர் மற்றொருவருடன் பகிர்ந்துக்கொள்ள வாக்களித்த புதிய வாழ்வை கனியுள்ளதாக மாற்றி அந்த புதிய வாழ்வை தொடர்ச்சியடைய செய்கிறது. வாழும் உயிரினங்களின் முழு தளத்திலும், தேவன் இந்த அடிப்படை கோட்பாடை ஏற்படுத்தியுள்ள இணைப்பு இல்லாமல் கனி உண்டாகாது. உடன்படிக்கை, பகிரப்பட்ட ஜீவனுக்கும். பலன் கொடுத்தலுக்கும் நடத்தி செல்கிறது. பகிர்ந்துக்கொள்ளப்படாத வாழ்க்கை, பலனற்றதும், மலட்டுத்தன்மை உடயதாகவும் இருக்கிறது. திருமணத்தை இவ்விதமங்க. ஒரு உடன்படிக்கையாய் காணிதல், தற்காலத்தில் மக்களுக்கு இருக்கும் மனநிலையிலிருந்து மிகவும் வித்தியாசமானது. தற்காலத்து கலாச்சாரத்தின் மனநிலை, எனக்கு என்ன கிடைக்கும்? இதில் எனக்கு என்ன இருக்கிறது? என்று தான் இருக்கிறது. இவ்வித மனநிலையுடன் அணிகப்படும் எந்த உறவும். தோல்விக்கென்றே நியமிக்கப்பட்டுள்ளது. திருமணத்தை, ஒரு உடன்படிக்கை என்ற மனநிலையுடன் அனுகுவோர், எனக்கு என்ன கிடைக்கும் ? என்று கேட்க மாட்டார்கள். மாறாக, நான் என்ன கொடுக்க முடியும் ? என்று கேட்கின்றனர். கேட்பது மட்டுமல்லாமல், தங்கள் கேள்விக்கான பதிலாக, என் ஜீவனை கொடுப்பேன். அதை உனக்காக நான் விட்டுக்கொடுத்து, உன்னில் எனது புதிய ஜீவனை நான் கண்டடைகிறேன் என்று கூறுகின்றனர். இது இரு தரப்பினருக்கும் சரி சமமாக உண்மையாகும் கணவனானாலும், மனைவியானாலும் சரி. இயற்க்கையான மனதிற்கு இது வேடிக்கையாக இருக்கும். ஆனால், இது உண்மையான வாழ்வு, உண்மையான சந்தோஷம் மற்றும் உண்மையான அன்பின் இரகசியமாக இருக்கிறது.
இது என் புத்தகத்திலிருந்து நான் எடுத்த ஒரு பகுதி. நான் முடிக்கும் முன் இதை நான் உங்களுக்காக சாராம்சமாக சொல்லுகிறேன்.
இழக்கிறதற்கு ஒரு வாழ்வும், கண்டடைவதற்கு ஒரு வாழ்வும் உண்டு. உங்கள் ஜீவன் அல்லது வாழ்வை இருக்க பிடித்துக்கொண்டு நீங்கள் திருமணத்திற்குள் பிரவேசித்தால், அந்த உடன்படிக்கையில், தேவன் உங்களுக்கு வைத்திருக்கும் வாழ்வை நீங்கள் கண்டடைய முடியாது. அது ஒரு விசுவாசத்தின் அடி எடுத்து வைப்பதாகும். நீங்கள் விசுவாசத்தில் உங்கள் வாழ்வை விட்டுக்கொடுத்து, ஒரு புதிய முற்றிலும் வித்தியாசமான, இணைப்பினால் வருகிற தனியாக அனுபவிக்க முடியாத வாழ்வை கண்டடைய வேண்டும். திருமணத்தில் இணையும் இரு தரப்பினரும் அந்த விசுவாசத்தின் அடியை எடுத்து வைக்க வேண்டும்.
மறுபடியும். இங்கு முக்கியமான வார்த்தை, அர்ப்பணிப்பு என்பதாகும். இது ஒரு சோதனை செய்து பார்த்தல் அல்ல. நீங்கள் ஒரு அர்ப்பணிப்பை செய்ப வேண்டும். முக்கியமான உண்மை ஒன்று உண்டு. அது என்னவென்றால்: அர்ப்பணிப்பு, தேவனுடைய கிருபையை கட்டவிழ்க்கிறது. தேவனுடைய கிருபைபின்றி. எந்த திருமணமும் வெற்றி பெறாது. ஆனால் இருவரும் அந்த அர்ப்பணிப்பை செய்தாலொழிய தேவன் தம்முடைய கிருபையை அந்த திருமணத்தில் கட்டவிழ்க்க மாட்டார். தேவனுடைய கிருபையிலிருந்து. ஒரு திருமணத்தை வெற்றிபடைய செய்ப தேவையான யாவும் கிடைக்கும்.
குறியீடு: RP-R001-102-TAM









