இன்று நான் உங்களுடன் திருமணத்தை குறித்து பேச போகிறேன். ஒரு நேரடியான, தனிப்பட்ட கேள்வியுடன் ஆரம்பிக்க விரும்புகிறேன். உங்கள் திருமணம் வெற்றியுள்ளதா? உண்மையான சந்தோஷத்தையும் திருப்தியையும் உங்களுக்கு அளிக்கின்றதா? அல்லது, உங்களுக்கு இன்னும் திருமணமாகவில்லை என்றால், உங்கள் நன்பர்கள் எப்படி? எத்தனை தம்பதியரை பார்க்கும் போதே, எனக்கு திருமணம் ஆனால், இப்படி பட்ட ஒரு உறவை தான் நானும் விரும்புவேன் என்று உங்களால் சொல்ல முடிகிறது?

ஒரு முறை, தனது திருமண வாழ்வில் உதவியை நாடி என்னிடம் வந்த ஒரு இளைஞனை நான் நினைவுகூறுகிறேன். அவர் நன்கு அறியப்பட்ட ஒரு பெரிய சபை பிரிவில் ஊழியனாக இருந்தான். ஊழிய அனுபவத்தினால் அவர் விரக்தி அடைந்துவிட்டார். சகோதரன் பிரின்ஸ், சுமார் 40 தம்பதியினரை எனக்கு நன்றாக தெரியும். அவர்களில் அநேகர் என்னை போல ஊழியம் செய்கின்றனர். ஆனால் உண்மையை சொன்னால், அவர்களில் சந்தோஷமாய் இருக்கும் ஒரு தம்பதியினரை கூட என்னால் நினைவுகூற முடியவில்லை என்று அவர் என்னிடம் சொன்னார். இதை, இகழ்ந்து பேசுதல் என்று சொல்வீர்கள அல்லது உண்மை கூறுதல் என்பீர்களா?

வெற்றியுள்ள திருமணத்தை உடையவராக இருப்பது சாத்தியம் என்பதை நான் உங்களுடன் இன்று பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன். அப்படிப்பட்ட திருமணத்திற்கு இரு திறவுக்கோல் உண்டு. அது எனக்கு தெரியும், ஏனென்றால் நான் அதை கண்டுப்பிடித்துள்ளேன்.

முதலாவது, எனது தனிப்பட்ட பின்னணி அல்லது எனது தகுதியை நான் முன்வைக்கட்டும். நான் சொல்வது வெறும் தத்துவம் அல்ல, அது என்னுடைய அனுபவத்தையும் சார்ந்தது என்பதை நீங்கள் புரிந்துக்கொள்ளுங்கள். சில நேரங்களில் திருமணம் அல்லது குடும்ப விஷயங்களில் நிபுனர் என்று தங்களையே கூறிக்கொள்ளுகிறவர்கள், நீண்ட மனோத்தத்துவ வார்த்தைகள் மற்றும் பாஷையும் பேசுவார்கள். ஆனால் அவர்கள் வாழ்க்கையை பார்த்தால், ஒன்று உடைந்த குடும்பங்களின் பின்னணியில் இருந்து வந்திருப்பார்கள் அல்லது தாங்களே ஒரு முறை விவாகரத்து செய்து மறுமணம் முடித்தவர்களாக இருப்பார்கள். இதை காணீம் போது நான் மிகவும் துக்கம் அடைவேன். அப்படிப்பட்ட ஒரு நிபுனரின் பேச்சு எனக்கு ஏற்புடையதல்ல. ஏனென்றால், தன் சொந்த வாழ்கையில் அதை செயல்படுத்த முடியாதவர், மற்றவர்களுக்கு எப்படி ஆலோசனை கூறி, அவர்களுக்கு உதவ முடியும்?

என்னுடைய விஷயத்தில், நான் சொல்லும் யாவும் பல்கழைக்கழக பட்டங்கள் அல்லது பதவி சான்றிதழ்களை சார்ந்ததல்ல என்று நீங்கள் அறிய விரும்புகிறேன். அவை இரண்டும் என்னிடம் உண்டு. பிரிட்டன் நாட்டின் கேம்பிரிட்ஜ் பல்கழைக்கழக பட்டமும் எனக்கு உண்டு, போதகராக ஏற்படுத்தப்பட்ட சான்றிதழும் என்னிடம் உண்டு. ஆனால், இன்று நான் உங்களுடன் பேசுவதோ, என் தனிப்பட்ட அனுபவத்திலிருந்து பேசுகிறேன்.

லிடியாவுடன், என்னுடைய முதல் திருமணம் 30 ஆண்டுகள் நீடித்தது. 1975ல் அவளுடைய மரணம் அதை முடிவுக்கு கொண்டு வந்தது. நாங்கள் ஒன்றாக வாழ்ந்த காலத்தில் 9 பெண் பிள்ளைகளை வளர்த்தோம், ஆகவே பிள்ளைகள் வளர்ப்பதை குறித்து நான் அறிந்திருக்கிறேன். நாங்கள் அநேக கடினமான அனுபவங்களை கடந்து வந்தோம். நாங்கள் இஸ்ரவேல் தேசத்தை உருவாக்கின யுத்தத்தின் மத்தியில் வாழ்ந்தோம். முற்றுகை, பஞ்சம் மற்றும் ஆபத்துக்களை எதிர்க்கொண்டோம். நாங்கள் தேசத்தை விட்டு தேசம், கண்டம் விட்டு கண்டம் சென்றோம். ஆப்பரிக்கா, கனடா மற்றும் அமெரிக்காவில் பணியாற்றினோம். ஆனால் எங்களுடைய திருமணம் திடமாக, சந்தோஷமாக மற்றும் வெற்றியுள்ளதாக இருந்தது.

ஒரு திருமணத்தின் வெற்றி பிரச்சனையின்மையை சார்ந்ததல்ல என்று புரிந்துக்கொள்ளுங்கள். அந்த பிரச்சனைகள் மற்றும் அழுத்தங்களை தாண்டி வரக்கூடிய ஒரு உறவை ஏற்படுத்துவதில் உள்ளது. எந்த திருமண வாழ்கையும் எளிதாக அமைந்து விடுவதில்லை.

வெற்றுயுள்ள திருமணத்திற்கு திறவுக்கோல் எங்கிருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். என் பதில் எளிமையானது: வேதாகமத்தில். வேதாகமம், உண்மையான, அர்த்தமுள்ள, தற்காலத்திற்குரிய ஒரு புத்தகம். இன்றுள்ள வாழ்க்கையின் பிரச்சனைகளுக்கு அதினுள் பதில்கள் உண்டு. அப்பியாசித்தால் போதும், அது பலனளிக்கும். வேதாகமம் திருமணத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கின்றது சபைக்குச் செல்லும் கிறிஸ்தவர்கள் உணர்வதை விட அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

வேதாகமத்தை பொருத்த வரை, மனித சரித்திரம் ஒரு திருமணத்தில் ஆரம்பித்தது. தேவன் ஆதாமைஉறுவாக்கி, அவன் தனிமையாய் இருப்பது நல்லதல்ல என்று சொல்லி, அவனுக்கு ஏற்ற ஒரு துணையை ஏற்படுத்தி, மனைவியான அவளை, தேவன் தாமே அவனிடம் கொண்டு வந்தார். திருமணம் தேவனுடைய இருதயத்தில் தோன்றின ஒன்று, மனிதனுடைய சிந்தையில் அல்ல. ஆகவே திருமணத்தை குறித்த தேவனுடைய கருத்தை விட்டு நாம் விலகினால், அது பலன் தராது. இன்னும் சொன்னால், வேதாகமம் ஒரு திருமணத்தில் தான் முடிவடைகிறது. மனித சரித்திரத்தின் உச்சக்கட்டம், ஆட்டுக்குட்டியானவரின் திருமண விருந்து. சரித்திரம் முழுவதும் அதை நோக்கி தான் நகர்ந்துக் கொண்டிருக்கிறது. ஆகவே, வேதாகமத்தை நீங்கள் பாரபட்சமற்ற பார்வையுடன் காண்பீர்கள னால், அது திருமணத்தின் மீது அதிக முக்கியத்துவத்தை வைக்கிறதென்று நான் சொல்லும் போது, என்னுடன் ஒத்துப்போவீர்கள்.

திருமணம் வேதாகமத்தில் உறுவாக்கப்பட்டது. அது தேவனுடய இருதயத்தில் உண்டானது. அங்கே தான் வெற்றியுள்ள திருமணத்தின் திறவுக்கோலை காண்கிறோம்.

எபேசியர் 5ம் அதிகாரத்தில், பவுல் திருமணத்தை குறித்து பேசிக்கொண்டிருக்கிறார். சபையோடு இருக்கும் இயேசு கிறிஸ்துவின் உறவை, மனவாட்டியுடன் மணவாளனுக்கு இருக்கும் உறவோடு ஒப்பிட்டு பேசுகிறார். இந்த ஒப்பனையை, இந்த இரகசியம் பெரியது என்ற வார்த்தைகளுடன் அவர் நிறைவு செய்கிறார். அவர் திருமணத்தை குறித்து பேசுகிறார். புதிய ஏற்பாட்டின் மொழியை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். இரகசியமா என்பதற்கு குறிப்பிட்ட அர்த்தம் இருந்தது. பெரும்பாலான மக்கள் அறியாத ஒரு இரகசியம், ஆனால் ஒரு சரியான முன்னுறை அளிக்கப்பட்டு, சரியான மக்களுடன் சேர்ந்துக்கொண்டால், அது கற்றுக்கொள்ளப்பட கூடியது என்று அர்த்தம் கொண்டது. அநேகர் அறியாத இரகசியம் தான், ஆனால் சரியான ஒரு அறிமுகம் அளிக்கப்பட்டால், இதனை கற்றுக்கொள்ளலாம். இன்று என்னுடைய உறையிலும், தொடர்ந்து இந்த வாரம் முழுவதிலும், இதை தான் செய்து, உங்களுக்கு உதவும் படி நான் விரும்புகிறேன்.

வெற்றியுள்ள திருமணத்திற்கு, திறவுகோலாக இருக்கும் இந்த இரகசியத்திற்கு வர, பழைய ஏற்பாட்டின் கடசி புத்தகமாகிய மல்கியாவுக்கு திருப்புவோம். அந்த காலத்தில், ஒரு தேசமாக, இஸ்ரவேல் தேவனோடு நெருக்கமாக வாழவில்லை. தேவன் தமது நியாயப்பிரமாணத்தை தந்திருந்தும், அவர்கள் கீழ்படியாதவர்கள க இருந்து, தேவன் வாக்களித்த ஆசீர்வாதங்களை அனுபவிக்காமல் இருந்தனர். அவர்களுக்கு அநேக பிரச்சனைகள் இருந்தன. இன்று இருப்பது போலவே, இதில் அநேக பிரச்சனைகள், வீடுகளே டும். திருமணத்தோடும் தொடர்புடையவை. அவர்களுடைய பிரச்சனைகளுக்கான காரணத்தை தேவன் சுட்டி காண்பிக்கின்றார். மல்கியா 2: 13 - 14 வசனங்களை நான் வசிக்க போகிறேன்:

நீங்கள் இரண்டாந்தரமும்சிதைச் செய்து, கர்த்தருடைய பீடத்தைக் கண்ணீரினாலும் அழுகையினாலும் பெருமூச்சினாலும் நிரப்புகிறீர்கள்: ஆகையால், அவர் இனிக் காணிக்கையை மதியார், அதை உங்கள் கைகளில் பிரியமாய் ஏற்றுக்கொள்ளவுமாட்டார்.

இதை புரிந்துக்கொண்டீர்கள? அவர்கள் பக்தியுள்ள மக்கள் தான். அவர்கள் அதிமாக ஜெபித்துக் கொண்டிருந்தனர் ஆனால் தேவன் அவர்கள் ஜெபங்களுக்கு பதில் அளிக்கவில்லை. "என்ன காரணத்தினால் ? என்று அவர்கள் கேட்டார்கள். தேவன் அவர்களுக்கு இந்த பதிலை தான் தந்தார்:

கர்த்தர் உனக்கும் உன் இளவயதின் மனைவிக்கும் சாட்சியாயிருக்கிறார்; உன் தோழியும் உன் உடன்படிக்கையின் மனைவியுமாகிய அவளுக்கு நீ துரோகம் பண்ணினாயே.

இதை குறித்து, நீங்கள் மூன்று குறிப்புகளை கவனிக்க நான் ஆசைப்படுகிறேன். முதலாவது, மதம் அல்லது பக்தி, வெற்றியுள்ள திருமணங்களை உருவாக்குகிறதில்லை. இவர்கள் மிகுந்த பக்தியுள்ளவர்கள் தான். எப்போதும் ஜெபித்துக்கொண்டிருந்தனர். எப்போதும், ஆலயத்தில் இருந்தனர். ஆனால் அவர்களுடைய வீடுகளே, அலங்கோலமாக கிடந்தன. இன்றுள்ள அநேக சூழ்நிலைகளிலும் இது உண்மை என்பது உங்களுக்கு தெரியுமா? சபைக்கு சென்று, வேதத்தை அதிகமாக எடுத்து கூறி, பக்தியுள்ள வார்த்தைகளை பேசுகிற மக்கள், சந்தோஷமான வீடுகளை உடையவர்கள் அல்ல. ஆகவே, மதம் அல்லது பக்தி, ஒரு சந்தோஷமான வீட்டை உறுவாக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இரண்டாவதாக, கணவன் மனைவிக்குள் இருக்கும் தவறான ஒரு உறவு, தேவனோடிருக்கும் உறவை தடை செய்கிறது என்பதை கவனியுங்கள். தேவன் அவர்களுடைய ஜெபங்களை கேட்க மாட்டேன் என்று கூறின போது, அவர்கள் ஏன்? என்று கேட்டனர். அதற்கு அவர், உன் மனைவியுடன் நீ சரியாக நடந்துக்கொள்ளவில்லை. உடன்படிக்கையின் மனைவிக்கு துரோகம் செய்தாய்ா என்று பதிலளித்தார்.

மற்ற வேத வசனங்களும் இந்த கருத்தை கூறுகின்றன. 1 பேதுரு 3ம் அதிகாரத்தில், தங்கள் ஜெபங்களுக்கு தடை வராத படி, கனவர்கள் தங்கள் மனைவிகளுடன் எப்படி ஜாக்கிரதையாக வாழ் வேண்டும் என்று பேதுரு கட்டளையிடுகிறார். வேறு விதமாக சொன்னால், மகிழ்ச்சியற்ற திருமணம் அல்லது ஒழுங்கற்ற வீட்டிலிருந்து நீங்கள் ஜெபம் பண்ணினால், உங்கள் ஜெபங்கள் பலனற்று போகலாம். உங்கள் வீட்டை ஒழுங்குப்படுத்தும் படி தேவன் கூறுகிறார்.

நான் முன்வைக்க விரும்பும் மூன்றாம் குறிப்பு, மிக முக்கியமானது. இது தான் திறவுக்கோல். அந்த வசனத்தின் கடைசி பகுதியில் உள்ளது. அது உடன்படிக்கைா என்ற வார்த்தையாகும். இதுவே வெற்றியுள்ள திருமணத்திற்கு திறவுக்கோல். திருமணம் ஒரு உடன்படிக்கை என்று வேதத்திலிருந்து மெய்யாக உணருதலாகும். வேதாகமத்தின் மிக முக்கிய மைய கருத்துக்களில், உடன்படிக்கை என்பதும் ஒன்று. உடன்படிக்கைா என்று மொழிப்பெயர்க்கப்படும் அதே வார்த்தை, ஏற்பாடுா என்றும் மொழிப்பெயர்க்கப்படுகிறது. ஆகவே, வேதாகமம் முழுவதும் இரண்டு உடன்படிக்கைகள் அல்லது ஏற்பாடுகளின் வடிவத்தில் நம்மிடம் வருகிறதென்று காண்கிறோம். உடன்படிக்கை என்பதற்கு எவ்வளவு முக்கியத்துவத்தை தேவன் அளிக்கிறார் என்பது இதிலிருந்து நமக்கு புரிய வேண்டும். அவருடைய முழு எழுதப்பட்ட வார்த்தையும், ஒரு உடன்படிக்கையின் உறுவில் நம்மிடம் வருகிறது.

திருமணத்தை பாதிக்கக்கூடிய இரண்டு முக்கிய அம்சங்கள் உடன்படிக்கைக்கு உண்டு. அவைகளை இங்கு கூறப்போகிறேன். முதலாவது, உடன்படிக்கைக்கு அர்ப்பணிப்பு அத்தியாவசியம் பூரண, தடையற்ற, முழு இருதயத்தோடான அர்ப்பணிப்பு. இது திருமணத்தின் பகுதியாகும். திருமணம் ஒரு முயற்ச்சி செய்து பார்க்கும் சோதனையின் உறவல்ல. முழு அர்ப்பணிப்பின் அடிப்படையில் தான் அது வெற்றி பெறும். இரண்டாவதாக, உடன்படிக்கையில், அர்ப்பணிப்பிற்கான நிபந்தனைகளை தேவனே ஏற்படுத்துகிறார். மனிதன் நிபந்தனைகளை ஏற்படுத்துவதில்லை, தேவனே அவைகளை ஏற்படுத்துகிறார். மல்கியாவின் நாட்களில் அது தான் இஸ்ரவேலின் பிரச்சனை. திருமணம் எப்படி இருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளை அவர்களே ஏற்படுத்திக்கொண்டிருந்தனர். அதை நான் ஏற்றுக்கொள்வதில்லைா என்று தேவன் கூறினார். ஆகவே, இந்த இரண்டு முக்கியமான முறிப்புகளை நீங்கள் பற்றிப்பிடித்துக்கொள்ளுங்கள். முதலாவது, திருமணம் ஒரு அர்ப்பணிப்புடன் ஆரம்பிக்கிறது. இரண்டாவதாக, தேவனே அதின் நிபந்தனைகளை ஏற்படுத்துகிறார்.

லைக்
பகிரவும்