மீண்டும் உங்களுடன் இருப்பது நல்லது. இந்த வாரம் நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் எனது வாழ்க்கையின் முக்கிய அம்சம் ஒரு இளைஞனாக எனது தனிப்பட்ட சத்தியத்திற்கான தேடல் ஆகும்.

எனது பதின்ம வயது முதல், எப்படியாவது வாழ்க்கைக்கு ஒரு அர்த்தமும், ஒரு நோக்கமும் இருக்க வேண்டும் என்ற ஆழமான உள் நம்பிக்கை எனக்கு எப்போதும் இருந்தது, அதை எங்கே கண்டுபிடிப்பது என்றுதான் எனக்கு தெரிந்திருக்கவில்லை. நான் கிறிஸ்தவத்தில் அதைக் கண்டுபிடிப்பேன் என்று நம்பினேன், ஆனால் நான் ஏமாற்றமடைந்தேன். பின்னர் நான் தத்துவத்திற்கும், ஓரியண்டல் அமைப்புகளிடத்திலும் குறிப்பாக யோகாவில் விடையைத் தேடினேன். ஆனால், நான் கல்வியில் வெற்றி பெற்று, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தத்துவப் பேராசிரியராக பதவியை அடைந்திருந்தாலும், நான் தேடியது இன்னும் கிடைக்கவில்லை.

பின்னர், இரண்டாம் உலகப் போர் வெடித்தது, நான் பிரிட்டிஷ் இராணுவத்தில் சேர்க்கப்பட்டேன். நான் ஒரு பைபிளை வாங்கி, அதை ஒரு தத்துவப் பணியாகப் படிக்க எடுத்துச் சென்றேன். ஆனால் மீண்டும் ஒருமுறை நான் குழப்பமடைந்தேன். வேதத்தில் எந்த ஒத்திசைவான செய்தியையும் என்னால் கண்டிபிடிக்க முடியவில்லை.

பின்னர், நான் ஒரு வித்தியாசமான கிறிஸ்தவ குடும்பத்தை சந்தித்தேன் - அவர்கள், தாழ்மையானவர்கள், படிக்காதவர்கள், ஆனால் வித்தியாசமானவர்கள். அவர்களது வீட்டில் அவர்களுடன் இருந்தபோது, அவர்களைப் பற்றி இரண்டு விஷயங்களை உணர்ந்தேன்: முதலாவது, அவர்களுக்கு பைபிள் அர்த்தமுள்ள, புதுப்பிக்கப்பட்ட ஒரு புத்தகமாக இருந்தது; இரண்டாவதாக, அவர்கள் தேவனுடன் உண்மையான, தனிப்பட்ட உறவைக் கொண்டிருந்தனர். பிரிட்டனின் மிகப்பெரிய பல்கலைக் கழகத்தில் பல வருடங்கள் படித்த பிறகும் என்னால் வேதத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை, ஆனால் அவர்களால் முடிந்தது என்ற ஒரு ஏமாற்றத்தை உணர்ந்தேன். ஆனால், நான் என்னை நானே கேட்டுக்கொண்டேன், “இதைத்தான் நான் தேடுகிறேனா?” ஆனால் அந்த கேள்வியை நான் கேட்டவுடன், வேறு பல கேள்விகளும் உடனடியாக என் மனதில் தோன்றின. இந்த மக்கள் கொண்டிருந்தது என்னவாக இருந்தாலும் அதில் நான் ஈடுபடுவதில் ஏற்படும் தாக்கங்களைப் பற்றி நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன், மேலும், அது அவர்களின் முழு வாழ்வையும் எடுத்துக் கொண்ட ஒன்று என்பதை நான் கண்டேன்.

கேள்விகள் இதுபோன்றதாக இருந்தது: நீ இதில் ஈடுபட்டால், உங்கள் பல்கலைக்கழக வாழ்க்கை என்னவாகும்? உன் நண்பர்கள் என்ன சொல்லுவார்கள்? மிக மோசமானது, உங்கள் குடும்பத்தினர் என்ன சொல்லுவார்கள்? நீங்கள் மனசாட்சியை எதிர்ப்பவராக மாறியது ஒரு அவமானம், ஆனால் நீங்கள் அதற்கு மேல் மத வெறியராக மாறுகிறீர்கள் என்றால் என்னவாகும்?

எனவே, இந்த கேள்விகள் எப்படியோ என் மனதைத் தாக்கின, நான் என் சுற்றுபுறத்தை அறியாமலேயே சிறிது நேரம் சுற்றி வந்தேன். இந்த நபர்களுக்கு உள்ள ஆசைக்கும், அதில் ஈடுபடுவதால் ஏற்படும் விளைவுகள் பற்றிய பயத்துக்கும் இடையே ஒருவித ஆழமான, உள் மோதலை நான் கடந்துக் கொண்டிருந்தேன், தொடர்ந்து எனக்குள்ளே சொல்லிக் கொண்டிருந்தேன், “சரி, என் வாழ்க்கை என்னவாகும்? என் நண்பர்களுக்கு என்ன சொல்லுவேன்? என் குடும்பத்துக்கு என்ன சொல்லுவேன்?”

ஆனால், நான்கு அல்லது ஐந்து நாட்களுக்குப் பிறகு (எனக்கு எவ்வளவு நாட்கள் என்று சரியாக நினைவில் இல்லை), நான் தீர்க்கமான முடிவை அடைந்தேன். நான் ஒரு முடிவு எடுத்தேன். நான் இதை இவ்வாறு சுறுக்கமாகக் கூறலாம்: எனது தொழில் வாழ்க்கையில் என்ன நடந்தாலும் எனக்கு கவலையில்லை. என் நண்பர்கள் என்ன சொன்னாலும் கவலைப்படப் போவதில்லை. என் குடும்பத்தினர் என்ன சொன்னாலும் எனக்கு கவலையில்லை. எனக்கு இந்த விஷயம் வேண்டும், அது எதுவாக இருந்தாலும் சரி. அது என்னவென்று எனக்கு புரியவில்லை, ஆனால் அது எதுவாக இருந்தாலும், எனக்கு அது வேண்டும்.

சரி, நான் அந்த முடிவை எடுத்தபோது, “சரி, நான் அதை எப்படி பெறுவது?” என்று யோசித்தேன். ஒரு விஷயம் மட்டும் செய்வது என்று முடிவெடுத்தேன் அதுதான் ஜெபம் செய்வது. எனவே, ஒரு நாள் மாலை மிகவும் தாமதமாக இராணுவ முகாம் அறைக்கு சென்றேன், நான் மற்றொரு சிப்பாயுடன் பகிர்ந்துகொண்டேன், “இப்போது, எனக்கு ஏதாவது நடக்கும் வரை நான் ஜெபிக்கப் போகிறேன்” என்று எனக்குள்ளே சொல்லிக்கொண்டேன். அந்த நேரங்களில் எங்களிடம் படுக்கைகள் இல்லை, நாங்கள் தரையில் வைக்கோல் மெத்தைகளில் தூங்கினோம். அதனால் மற்ற சிப்பாய் மெத்தையில் படுத்து உறங்கும்வரை காத்திருந்தேன். பின்னர் நான் ஜெபம் செய்ய முடிவு செய்தேன். என்னிடம் சிறிய மடக்கு கேன்வாஸ் ஸ்டூல் இருந்தது. நான் அதை ஜன்னல் முன் வைத்து, ஸ்டூலில் உட்கார்ந்து, என் முழங்கைகளை ஜன்னல் மீது வைத்து ஜெபம் செய்ய முடிவு செய்தேன். மேலும், மீண்டும் ஒருமுறை குழப்பமடைந்தேன்.

எப்படி ஜெபிப்பது என்று எனக்கு தெரியவில்லை என்பதை உணர்ந்தேன். யாரிடம் ஜெபிப்பது என்று எனக்கு தெரியவில்லை, என்ன சொல்லி ஜெபிப்பது என்று எனக்கு தெரியவில்லை, என்னால் தொடங்க முடியவில்லை. இருள் சூழும்வரை ஒரு மணி நேரம் அந்த ஸ்டூலில் அமர்ந்திருந்தேன் என்று நினைக்கிறேன், ஏனென்றால், அது கோடை காலத்தின் நடுப்பகுதி என்பதால், வெகுநேரத்திற்கு பிறகுதான் இருள் சூழ்ந்தது. அந்த இருளில், ஸ்டூலில் உட்கார்ந்து, ஜன்னலில் என் முழங்கைகளை வைத்து, நான் ஜெபம் செய்ய முயன்றேன். மேலும், மீண்டும் ஒருமுறை நான் குழப்பமடைந்தேன்.

பின்னர் ஏதோ ஒன்று நடந்தது, அதை நான் விளக்குவது கடினமாகும். நான் விட்டுக்கொடுக்க தயாராக இருந்தபோது, ஒரு அறியப்படாத வல்லமை என்னைத் தொடர்புகொண்டது, அது தன்னை எனக்கு நிஜமாக்கியது. நான் ஒரு வல்லமை என்று சொல்லும்போது, அது மிகவும் சக்திவாய்ந்த ஒன்றைப் பற்றி நான் பேசுகிறேன். முதலில் என் கைகள் உயர ஆரம்பித்தது, மேலும் இந்த வல்லமைக்கு கீழ் அவை உயர செல்லும்போது, உள்ளங்கைகள் மேல்நோக்கி, கூரையை நோக்கி இருப்பதை நான் கவனித்தேன். எனக்குள் ஏதோ ஒன்று சொன்னது, “இப்போது ஏன் உள்ளங்கைகளை மேல்நோக்கி வைத்திருக்க வேண்டும்?” எனக்குள் இருந்த வேறு ஏதோ ஒன்று “உன்னதத்திலிருந்து வரும் பெலன்” என்று பதிலளித்தது. வேதத்தில், “உன்னதத்திலிருந்து வரும் பெலன்” என்ற வார்த்தைகள் இருப்பது கூட எனக்குத் தெரியாது. பின்னர் நான் கீழே இருந்து ஒரு வல்லமையின் தொடுதல் இருந்ததை ஒரு வகையான வெளிப்பாட்டின் மூலம் நான் திடீரென்று உணர்ந்தேன், ஆனால் என் வாழ்நாளில் இதுவரை நான் இந்த உன்னதத்திலிருந்து வரும் பெலனின் தொடர்பை பெறவில்லை.

பின்னர், இந்த பெலன் என் மீது தொடர்ந்து வருவதால், நான் ஒரு நபரைப் பற்றி அறிந்தேன். இந்த வல்லமையின் மூலம் ஒருவர் என்னிடம் வருவதுபோல் இருந்தது. அந்த நபர் யார் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அவர்தான் எனக்கான பதிலைக் கொண்டிருக்கிறவர் என்று எனக்குத் தெரியும். மேலும், நான் தேர்ந்தெடுக்காத வார்த்தைகள் என் வாயிலிருந்து வர ஆரம்பித்தது. “நீங்கள் என்னை ஆசீர்வதிக்காவிட்டால், நான் உங்களைப் போக விடமாட்டேன்!” என்று சொல்ல ஆரம்பித்தேன். “நான் உங்களைப் போக விடமாட்டேன்!” என்ற அந்த வார்த்தைகளை நான் பெற்றபோது, ஏதோ ஒன்று என்னை எடுத்துக்கொண்டு, என்னால் அவ்வாறு சொல்வதை நிறுத்த முடியவில்லை. “நான் உங்களைப் போக விடமாட்டேன்!” “நான் உங்களைப் போக விடமாட்டேன்!” “நான் உங்களைப் போக விடமாட்டேன்!” பின்னர், என் கைகளை உயரசெய்த இந்த மர்ம வல்லமை என் முழு உடலையும் எடுத்துக்கொண்டது. மேலும், என்னை அந்த ஸ்டூலில் இருந்து தூக்கி, கீழே தரையில் வைத்தது, என் கைகள் இன்னும் உயர்த்தியபடி இருந்தது, நான் இன்னும் சொல்லிக்கொண்டிருக்கிறேன், “நான் உங்களைப் போக விடமாட்டேன்!, நீங்கள் என்னை ஆசீர்வதிக்கும்வரை, நான் உங்களைப் போக விடமாட்டேன்!”எப்படியோ நான் ஒரு நபரை முதல் முறையாக சந்தித்தேன் என்று எனக்கு தெரிந்தது, அவர் நான் சந்தித்திராதவரும், இதுவரை நான் அறியாத ஒரு நபர், எனது தேடலுக்கு விடையாக இருந்த நபர் ஆவார்.

நான் என் கைகள் உயர்த்தப்பட்ட நிலையில் நான் தரையில் கிடந்தபோது, என் வாழ்க்கையில் முதல் முறையாக இந்த அறியாத நபரிடம் பேசுகிறேன், இந்த வல்லமை ஒரு கடல் போல என் மீது பாய்வது போல் தோன்றியது. உண்மையில், நான் இந்த மர்மமான, கண்ணுக்குத் தெரியாத ஆனால் மிகவும் உண்மையான வல்லமையின் கீழ் மூழ்கியிருப்பதாகத் தோன்றியது. அது கடல் அலைகளைப் போல என்மேல் சென்று கொண்டிருந்தது.

பின்னர், வேறு ஏதோ நடந்தது. என் உள்ளத்தின் ஆழத்தில் எனக்குள் ஏதோ ஒன்று தளர்ந்தது, ஒரு விடுதலை அடைந்ததைப் போல, பல வருடங்களாக அங்கே போடப்பட்டிருந்த ஒரு முடிச்சு கலைந்ததுபோல இருந்தது. மேலும், இந்த வல்லமையானது எல்லாவிதமான குப்பைகளையும், அசுத்தமான பொருட்களையும் சுமந்து செல்லும் ஒரு நதியைப் போல என் உடலில் இருந்து வெளியேறத் தொடங்கியது. ஒரு நதி உடைந்து, அதற்கு முன் இருக்கிற அனைத்தையும் சுமந்து செல்வதைப் போலவும், எல்லா வகையான பொருட்களை கொண்டு செல்லும் வெள்ளத்தைப் போலவும் எனக்கு தோற்றமளித்தது. தெரியாத தீய சக்திகள், இந்த ஆற்றின் மூலம் என் உடலிலிருந்து வெளியேற்றப்பட்டது – இந்த விசித்திரமான மர்மமான வல்லமையின் நதி செய்தது. எனக்கு பயமாக இருந்தது. நான் எங்கு கொண்டு செல்லப்பட்டேன், அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று எனக்குத் தெரியவில்லை. இன்னும், நான் எனக்குள் சொல்லிக்கொண்டேன், “நான் எவ்வளவு தூரம் வந்துவிட்டேன். நான் இப்போது நிறுத்த முயற்சித்தால், நான் இனி இவ்வளவு தூரம் வந்திருக்க மாட்டேன்.” எனக்குள் விசித்திரமான விஷயங்கள் நடந்தன. நான் அழ ஆரம்பித்தேன். என்னிடமிருந்து கண்ணீர் வடிந்தது. நான் எதைப் பற்றி அழுதேன் என்று எனக்குத் தெரியவில்லை. நான் அழ வேண்டும் என்று எதுவும் என் மனதில் இல்லை, ஆனால் என்னிடமிருந்து கண்ணீர் வழிந்தது. அது விசித்திரமாக இருந்தது, ஆனால், இந்த நதி என்னுள் பாய்ந்த ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, கண்ணீர் சிரிப்பாக மாறத் தொடங்கியது. மீண்டும், நான் சிரிக்க எந்த நினைவான காரணமும் இல்லை. உண்மையில், சிரித்தது நான் அல்ல. சிரிப்பு எப்படியோ எனக்குள் பாய்ந்து வெளியே வந்தது, நான் இந்த சிரிப்பு கடலில் மூழ்கி இருப்பது போல் உணர்ந்தேன்.

பின்னர், தரையிலே, தலைக்குமேல், தூங்கிக்கொண்டிருந்த மற்ற சிப்பாயின் போர்வை நகர்வதைக் கண்டேன். மேலும், மெதுவாக அவர் போர்வையில் இருந்து வெளியே வந்தார். அவர் தனது கீழ் ஆடைகளை மட்டுமே அணிந்திருந்தார். அவர் மெதுவாக எழுந்து, தயக்கத்துடன் என்னை நோக்கி நடந்தார். என்னைச் சுற்றி இரண்டு மூன்று முறை நடந்தார். அவர் என்னிடம் சொன்னது எனக்கு நினைவிருக்கிறது, “உன்னை என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. உன் மீது தண்ணீர் வீசுவது நல்லதல்ல என்று நினைக்கிறேன்.” என்னால் அவருக்கு பதிலளிக்க முடியவில்லை, ஆனால் எனக்குள் ஏதோ ஒன்று சொன்னது, “தண்ணீர் கூட இதை வெளியேற்றாது!”

பின்னர், விசித்திரமான ஒரு விஷயம் நடந்தது. வார்த்தைகள் எனக்கு வந்தன, அவை எங்கிருந்து வந்தன என்று எனக்குத் தெரியவில்லை, “மனிதன் பரிசுத்த ஆவிக்கு விரோதமாக நிந்திக்கக் கூடாது.” மேலும், என்னுடைய எல்லா நியாயங்களுக்கும் மாறாக, எனக்குள் இருப்பது பரிசுத்த ஆவியானவர் என்பதை நான் அறிந்தேன். எனவே, என் நண்பன் எதுவும் தவறாக பேசிவிட அனுமதிக்கக் கூடாது என்று நான் தீர்மானித்தேன். மிகுந்த சிரமத்துடன் நான் முழங்காலில் நின்று, என் மெத்தைக்குள் தவழ்ந்து, என்னுடைய இடத்துக்கு சென்று, போர்வையை மேலே இழுத்து அங்கேயே படுத்தேன், ஆனால் இந்த சிரிப்பு என்னுள் பாய்ந்து கொண்டிருந்தது.

அந்த வழியில், எப்படியோ சத்தியம் ஒரு நபராக இருந்ததை நான் அறிந்தேன். நான் எப்போதும் ஒரு கருத்துப் பொருளைத் தேடிக்கொண்டிருந்தேன். நான் ஒரு கோட்பாட்டைத் தேடிக்கொண்டிருந்தேன். நான் விளக்கத்தை தேடிக்கொண்டிருந்தேன். ஆனால், இப்போது நான் ஒரு நபரைக் கண்டுபிடித்தேன். எந்தவித தர்க்கமும் இல்லாமல், அந்த நபர் நாசரேத்தின் இயேசு என்று எனக்குத் தெரியும். அன்று முதல் இன்று வரை, இயேசு உயிருடன் இருக்கிறார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. நான் நீண்ட காலமாக புரிந்து கொள்ளத் தவறியதை நான் கண்டுபிடித்தேன். அந்த சத்தியம் ஒரு கருத்துப் பொருள் மட்டுமல்ல, அது ஒரு மதம் மட்டுமல்ல, அது ஒரு நம்பிக்கை மட்டுமல்ல, ஆனால், அவர் ஒரு நபர் ஆவார். இலட்சியத்திற்கும் உண்மைக்கும் இடையில் பல ஆண்டுகளாக என்னை தொந்தரவு செய்த அந்த மோசமான மோதலை இயேசுவில் நான் தீர்த்தேன். இலட்சியம் உண்மையானது என்பதை நான் இயேசுவில் கண்டேன். அவரது வாழ்க்கை, அவரது வார்த்தைகள், அவரது போதனை, எல்லாவற்றிற்கும் மேலாக அவர் நபர் ஆவார் – பல ஆண்டுகளாக என்னை உந்திய அந்த திருப்தியற்ற ஏக்கத்திற்கு அவை விடையாக இருந்தன.

சரி, இன்றைக்கு நமது நேரம் முடிந்துவிட்டது, ஆனால் நாளை இந்த நேரத்தில் உங்களுடன் மீண்டும் வருவேன். நாளை நான் விட்ட இடத்தில் தொடர்கிறேன். என் வாழ்க்கையில் உடனடியாக நடந்த மிகப்பெரிய மாற்றங்களை நான் உங்களுக்கு சொல்கிறேன்.

லைக்
பகிரவும்