நீதியுள்ள வாழ்க்கைக்கு விசுவாசம் மட்டுமே அடிப்படை.mp4

டெரெக் பிரின்ஸ்
Published: 1979
Last Updated: ஆகஸ்ட் 2026
Read Time: 9
டெரெக் பிரின்ஸின் 'விசுவாசமே நீதிமானாக வாழ்வதற்கான ஒரே அடிப்படை' என்ற போட்காஸ்ட் மூலம் விசுவாசத்தில் நிலைத்திருக்கும் நீதியான வாழ்வைப் பெற்றிடுங்கள். சுவிசேஷம் தேவநீதியை எவ்வாறு வெளிப்படுத்துகிறது என்பதை இதில் ஆராயுங்கள். 'விசுவாசம்' தொடரின் 4-ஆம் பகுதியில், வெறும் நம்பிக்கையோடு நின்றுவிடாமல், விசுவாசத்தினால் வாழ்வதன் முக்கியத்துவத்தை டெரெக் விளக்குகிறார். உங்கள் இதயத்தையும் வாழ்வையும் கர்த்தருடைய பூரண திட்டத்திற்கு ஏற்ப மாற்றிக்கொள்ள இது உங்களுக்கு உதவும்.
Transcript
இன்று மீண்டும் உங்களுடன் இருப்பது நல்லது.
நேற்றைய எனது பேச்சில், விசுவாசத்துக்கும், நம்பிக்கைக்கும் உள்ள வேறுப்பாட்டைக் கையாண்டேன். நான் பின்வரும் வேறுபாடுகளை நிறுவினேன்:
முதலில், விசுவாசம் நிகழ்காலத்தில் உள்ளது, நம்பிக்கை எதிர்காலத்தில் உள்ளது. இரண்டாவதாக, விசுவாசம் இதயத்தில் உள்ளது. நம்பிக்கை புத்தியில் உள்ளது. மூன்றாவதாக, விசுவாசம், நம்முடைய விசுவாசத்தை துவக்குகிறவராகிய இயேசுவுடன் நம்மை தொடர்புபடுத்துகிறது; நம்பிக்கை நம்முடைய விசுவாசத்தை முடிக்கிறவராகிய இயேசுவுடன் நம்மை தொடர்புபடுத்துகிறது. நான்காவதாக, விசுவாசம் இயேசு செய்ததை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இயேசு என்ன செய்வார் என்று நம்பிக்கை காத்திருக்கிறது. வேதத்தின் உருவகத்தை பயன்படுத்தும்போது, விசுவாசம் நம் இதயத்தைப் பாதுகாக்கும் மார்க்கவசமாகும், நம்பிக்கை என்பது நம் புத்தியைப் பாதுகாக்கும் தலைக்கவசமாகும்.
இன்று, விசுவாசம் மிக முக்கியமானது என்பதற்கான மற்றொரு முக்கிய காரணத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ளப் போகிறேன். நீதியுள்ள வாழ்க்கைக்கு இதுவே அடிப்படையாகும்.
இன்று நமது தொடக்க வேதவசனமாக, நாம் ரோமர் 1:16 & 17க்கு திருப்புவோம், அங்கு பவுல் இவ்வாறு கூறுகிறார்:
16 கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன்; முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவெனவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது. 17 விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறபடி, விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்தச் சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது.
சுவிசேஷம் மற்றும் அதன் வல்லமை பற்றி பவுல் பேசும் இடத்தில், விசுவாசத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. வசனம் 16இல், அவர் கூறுகிறார், “விசுவாசிக்கிறவெனவனோ…” அதுவே நம் வாழ்வில் சுவிசேஷத்தின் ஆற்றலை வெளிப்படுத்துவதற்கான திறவுகோலாகும். மேலும், வசனம் 17 இல், விசுவாசம் என்ற வார்த்தை உண்மையில், அந்த ஒரே வசனத்திலே மூன்று முறை வருகிறது. தேவனுடைய நீதியானது விசுவாசத்திலிருந்து விசுவாசத்திற்கு வெளிப்படுத்தப்படுகிறது, பின்னர், அவர் ஆபகூக் 2:4இல் இருந்து மேற்கோள் காட்டுகிறார்:
4 …..தன் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்.
எனவே, அந்த வசனத்தில், விசுவாசம் மூன்று முறை வருகிறது. நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, ஆபகூக் 2:4இல் இருந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ள “விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்” என்ற அதே வசனம் புதிய ஏற்பாட்டில் இரண்டு முறை கலாத்தியர் 3:11 மற்றும் எபிரெயர் 10:38இல் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், வேதத்தில் நான்கு முறை, தேவன் நமக்கு இந்த முக்கியமான உண்மையை கூறுகிறார்: விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான். இது நீதியையும், வாழ்க்கையையும் விசுவாசத்துடன் இணைக்கிறது. அது நீதி மற்றும் வாழ்க்கை ஆகிய இரண்டையும் விசுவாசம் சார்ந்ததாக ஆக்குகிறது.
“வாழு” என்ற சொல் நாம் பயன்படுத்தக்கூடிய அனைத்து வார்த்தைகளையும் உள்ளடக்கிய ஒன்றாகும். இது வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கும் அனைத்தையும் உள்ளடக்குகிறது. இது மதம் அல்லது ஆவிக்குரியது என்று நாம் கருதக்கூடியவற்றை மட்டும் குறிப்பதில்லை. ஜெபம் செய்வது அல்லது தேவாலயத்திற்கு செல்வது அல்லது வேதத்தை பிடிப்பது போன்ற விஷயங்களை மட்டும் குறிப்பதில்லை. ஆனால், “வாழ்வது” என்பது உறங்குதல், உண்ணுதல், பேசுதல் போன்ற சாதாரண அன்றாடச் செயல்களை உள்ளடக்கியது; இவை அனைத்தும் விசுவாசத்தின் திசைகாட்டிக்குள் வருகின்றன. இந்த ஒவ்வொரு அன்றாட செயல்களிலும் நாம் நீதியுள்ளவர்களாக இருக்க ஒரே வழி விசுவாசம் மட்டும்தான். விசுவாசத்தைத் தவிர நீதி இல்லை.
சுவாரஸ்யமாக, ரோமர் புத்தகத்தில், பவுல் இந்த கொள்கையை குறிப்பாக சாதாரணமான மற்றும் அன்றாடம் சாப்பிடும் விஷயத்திற்கும் பயன்படுத்துகிறார்; நான் மேற்கோள் காட்டப் போகும் வசனத்தில், அதாவது ரோமர் 14:23இல், அவர், “மாறாக” கூறுகிறார். ரோமர் 1:17இல், “விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்” என்றும், ரோமர் 14:23இல், “விசுவாசத்தினாலே வராத யாவும் பாவமே” என்றும் அதற்கு எதிர்மாறாகக் கூறுகிறார். மீண்டும், நமது மொத்த வாழ்வில் நீதிக்கான ஒரே அடிப்படை விசுவாசம் மட்டுமே என்ற உண்மையை இது கொண்டு வருகிறது. விசுவாசத்திலிருந்து எதுவும் நடக்கவில்லை என்றால், அது நீதியானது அல்ல. உண்மையில், அது ஒரு பாவம் ஆகும்.
ரோமர் 14:23இல், பவுல் கூறுவதைப் பார்ப்போம்:
23 ஒருவன் சமுசயப்படுகிறவனாய்ப் புசித்தால், அவன் விசுவாசமில்லாமல் புசிக்கிறபடியினால், ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுகிறான். விசுவாசத்தினாலே வராத யாவும் பாவமே.
எனவே, விசுவாசமில்லாமல் உண்பதுகூட பாவமாகும். சரி, இது ஒரு சுவாரஸ்யமான கேள்வியை எழுப்புகிறது, அதை நாம் ஒரு கணம் பார்க்கலாம்.
விசுவாசத்தோடு சாப்பிடுவது என்றால் என்ன? சாப்பிடுவது போன்ற சர்வ சாதாரணமான ஒன்றிற்கு விசுவாசம் எப்படி அடிப்படையாக இருக்க முடியும்? விசுவாசத்திலிருந்து சாப்பிடுவதில் ஈடுபட்டுள்ள பல்வேறு விஷயங்களை நான் உங்களுக்குப் பரிந்துரைக்கிறேன்.
முதலில், நமது உணவு தேவனிடமிருந்து வருகிறது என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும். சங்கீதம் 104:14 & 15இல், சங்கீதக்காரன் இதை மிகத் தெளிவாகக் கூறுகிறார். அவர் சொல்கிறார்:
14 பூமியிலிருந்து ஆகாரம் உண்டாகும்படி, அவர் [தேவன்] மிருகங்களுக்குப் புல்லையும், மனுஷருக்கு உபயோகமான பயிர்வகைகளையும் முளைப்பிக்கிறார். 15 மனுஷனுடைய இருதயத்தை மகிழ்ச்சியாக்கும் திராட்சரசத்தையும், அவனுக்கு முகக்களையை உண்டுபண்ணும் எண்ணெயையும், மனுஷனுடைய இருதயத்தை ஆதரிக்கும் ஆகாரத்தையும் [அது உண்மையில், அப்பம்] விளைவிக்கிறார்.
எனவே, நமது அடிப்படை உணவு அனைத்தும் தேவனிடமிருந்து வருகிறது. விசுவாசம் அதை ஒப்புக்கொள்கிறது. அதை ஒப்புக்கொண்டதன் விளைவாக, உணவுக்காக விசுவாசம் தேவனுக்கு நன்றி செலுத்துகிறது. மேலும், இது உணவை பரிசுத்தப்படுத்துகிறது. இது ஒரு சிறந்த தரத்தை அளிக்கிறது. பவுல் இதை 1 தீமோத்தேயு 4:4 & 5 இல் கூறுகிறார்:
4 தேவன் படைத்ததெல்லாம் நல்லதாயிருக்கிறது; ஸ்தோத்திரத்தோடே ஏற்றுக்கொள்ளப்படுமாகில் ஒன்றும் தள்ளப்படத்தக்கதல்ல. 5 அது தேவவசனத்தினாலும் ஜெபத்தினாலும் பரிசுத்தமாக்கப்படும்.
எனவே, நம்முடைய உணவுக்காக ஜெபத்தில் தேவனுக்கு நன்றி சொல்லும்போது, அதை பரிசுத்தப்படுத்துகிறோம். நாம் அதை ஆரோக்கியமாக்குகிறோம்.
மூன்றாவதாக, விசுவாசத்துடன் உண்பது என்பது நமது உணவு கொடுக்கும் பலத்தை தேவனுக்கு அர்ப்பணிப்பதுமாகும். ரோமர் 12:1இல் பவுல் கூறுகிறார்:
1 அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக் கொடுக்க வேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு, உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.
எனவே, நமது உடல்கள் அவற்றின் பலத்தையும், அவற்றின் ஆதாரத்தையும் தேவனிடமிருந்து பெறுகின்றன, மேலும், உணவு நம் உடலுக்கு அளிக்கும் பலத்தை மீண்டும் அவருக்கு அர்ப்பணிப்பதன் மூலம் தேவனை வேண்டிக்கொள்கிறோம். 1 பேதுரு 4:11 இல், பேதுரு சொல்கிறார்:
11 ஒருவன் போதித்தால் தேவனுடைய வாக்கியங்களின்படி போதிக்கக்கடவன்; ஒருவன் உதவிசெய்தால் தேவன் தந்தருளும் பெலத்தின்படி செய்யக்கடவன்;…
எனவே, நம்முடைய உணவின் மூலம், அவருக்குச் சேவை செய்வதற்கான பலத்தை தேவன் நமக்கு வழங்குகிறார் என்பதை ஒப்புக்கொள்கிறோம்.
பின்னர், விசுவாசத்தில் சாப்பிடுவதற்கு நேர்மாறாக இருக்கும் ஒன்றை நாம் பார்ப்போம். இது உண்மையில் மிகவும் சுவாரஸ்யமானது.
வேதத்தின் புத்தகங்களில் மிகக் குறைவாகப் படிக்கப்பட்ட புத்தகங்களில் ஒன்று பிரசங்கி புத்தகம், பிரசங்கி 5:17இல், சாலமொன் விசுவாசத்தால் சாப்பிடாததைச் சித்தரிக்கிறார்: பிரசங்கியில் பல பகுதிகளில் நாம் “இயற்கை மனிதன்” என்று அழைக்கும் மனிதனை கையாள்கிறது, விசுவாசத்தின் மூலம் தேவனுடன் தொடர்பில்லாத மனிதன். மேலும், பிரசங்கி 5:17இல், சாலமொன் இப்படிப்பட்ட மனிதனைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்:
17 அவன் தன் நாட்களிலெல்லாம் இருளிலே புசித்து மிகவும் சலித்து, நோயும், துன்பமும் அடைகிறான்.
எனவே, விசுவாசமில்லாமல் உண்பது இருளில் உண்பதாகும். மேலும், அதன் முடிவுகள்: சலிப்பு, நோய் மற்றும் துன்பம் ஆகும். இன்று நமது சமகால சமூகத்தில் அதற்கான பல நிரூபணங்களை நாம் காண்கிறோம் என்று நினைக்கிறேன், மக்கள் தேவனை அங்கீகரிக்காமலும், அவருடைய ஆசீர்வாதத்தைப் பெறாமலும், தங்கள் உணவுப் பலத்தை அவருக்கு அர்ப்பணிக்காமலும் தங்கள் உணவை சாப்பிடுகிறார்கள். அவர்கள் இருளில் உண்கிறார்கள், பற்பல நேரங்களில், அவர்களின் வாழ்வில் ஏற்படும் விளைவுகள் சலிப்பு, நோய் மற்றும் துன்பம் ஆகும்.
நீதியான வாழ்க்கைக்கு ஒரே அடிப்படை விசுவாசம் என்பதை நாம் பார்த்தோம், இது நம் வாழ்வின் ஒவ்வொரு பகுதிக்கும் பொருந்தும். விசுவாசத்தில் சாப்பிடுவது என்றால் என்ன என்பதைப் பார்த்தோம்.
தூக்கத்திற்கும் இது பொருந்தும். தூக்கத்தைப் பற்றிய தேவனுடைய பிள்ளைகளின் சில வார்த்தைகளை உங்களுக்குத் தருகிறேன். சங்கீதம் 3:4-6 இல், தாவீது இவ்வாறு கூறுகிறார்:
4 நான் கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்; அவர் தமது பரிசுத்த பர்வதத்திலிருந்து எனக்குச் செவிகொடுத்தார். 5 நான் படுத்து நித்திரை செய்தேன்; விழித்துக்கொண்டேன்; கர்த்தர் என்னைத் தாங்குகிறார். 6 எனக்கு விரோதமாகச் சுற்றிலும் படையெடுத்து வருகிற பதினாயிரம் பேருக்கும் நான் பயப்படேன்.
கவனியுங்கள், தாவீது உறங்குகிறார், பாதுகாப்பாக உறங்கி மீண்டும் எழுந்திருக்கிறார், அவர் தனது ஜெபங்களுக்கு காரணத்தைக் கொடுக்கிறார். “நான் கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்; அவர்…. எனக்குச் செவிகொடுத்தார்.” எந்த வகையில்? இந்த வழியில், “நான் படுத்து நித்திரை செய்தேன்; விழித்துக்கொண்டேன்; கர்த்தர் என்னைத் தாங்குகிறார்.” தாவீது தன்னுடைய தூக்கம் தேவனிடமிருந்து வந்தது என்பதை ஒப்புக்கொண்டார். மீண்டும், அவர் அடுத்த சங்கீதத்தில் சொல்கிறார்: சங்கீதம் 4:8:
8 சமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரை செய்வேன்; கர்த்தாவே, நீர் ஒருவரே என்னை சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர்.
ஐயோ, சமகால சமூகத்தில் பலர் தேவனுடைய பாதுகாப்பை எண்ணி, நிம்மதியாக படுத்துக்கொண்டு நித்திரை செய்வதன் அந்த ரகசியத்தை அறியாத பலர் இருக்கிறார்கள் என்று நான் பயப்படுகிறேன். தூக்கமின்மைக்கு இது ஒரு நல்ல தீர்வு இல்லையா? “சமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரை செய்வேன்.” அதன் அடிப்படை, நிச்சயமாக, விசுவாசம்தான். தேவனுடைய உண்மைத்தன்மையில் விசுவாசமாக இருப்பது.
பின்னர், மீண்டும், சங்கீதம் 127:2 இல், சங்கீதக்காரன் இவ்வாறு கூறுகிறார்:
நீங்கள் அதிகாலையில் எழுவதும், தாமதமாக ஓய்வெடுப்பதும், வருத்தத்தின் அப்பத்தைச் சாப்பிடுகிறதும் விருதா; ஏனென்றால், அவரே தமக்குப் பிரியமானவனுக்கு நித்திரையிலும் கொடுக்கிறார்.
அது நியூ அமெரிக்கன் ஸ்டாண்டர்ட் பதிப்பாகும்; நாம் உறங்கும்போதும் நமக்குத் தேவையானதைத் தேவன் கொடுக்கிறார் என்று அது கூறுகிறது. அவர் தூங்குவதில்லை. அவர் வழங்குகிறார். அவர் நம்மைக் கண்காணிக்கின்றார். நியூ இண்டெர்நேஷனல் பதிப்பு அதை வேறு விதமாக சொல்கிறது, இதுவும் முறையானதாகும்.
நீங்கள் அதிகாலையில் எழுந்து, நேரப்பட வேலையிலே தரித்து, வருத்தத்தின் அப்பத்தைச் சாப்பிடுகிறதும் விருதா; அவரே [அவர் தேவன் ஆவார்] தமக்குப் பிரியமானவனுக்கு நித்திரை அளிக்கிறார்.
எனவே, அந்த சங்கீதத்தை நீங்கள் எந்த வழியில் விளக்கினாலும், ஒவ்வொன்றும் முறையானது என்று நான் நம்புகிறேன், தூக்கம் என்பது தேவனுடைய (ஈவு) பரிசாகும். உண்மையில் தேவனில் விசுவாசமாக இருந்தால் நிம்மதியாக படுத்து உறங்கலாம். நாம் உறங்கும்போதும், தூங்கும்போதும் தேவன் நம்மைப் பாதுகாப்பார் என்பதை அறிவோம், அவர் நம் சார்பாக வேலை செய்கிறார், மேலும், நமது எல்லா தேவைகளுக்கும் ஏற்பாடு செய்கிறார். அவர் தமக்குப் பிரியமானவனுக்கு உறக்கத்திலும் கொடுக்கிறார். அவர் தமக்குப் பிரியமானவனுக்கு உறக்கத்தைக் கொடுக்கிறார். நான் அதை இரண்டு வழிகளிலும் எடுக்க விரும்புகிறேன். வேதாகமத்தின் இரண்டு வெவ்வேறு பதிப்புகள் இருக்கும்போது, அவை இரண்டும் நன்றாக இருக்கும்போது, நான் அதை இரண்டு வழிகளிலும் எடுத்துக்கொள்கிறேன்.
சரி, இன்று என் பேச்சை முடிப்பதற்கு முன், அதை நான் வெளிப்படுத்த விரும்புகிறேன்.
நமது முடிவு இதுதான்: வாழ்வையும், நீதியையும் பெறும் ஒரே வழி விசுவாசமாகும். விசுவாசத்தின் அளவுகோல் நாம் அனுபவிக்கும் நீதி மற்றும் வாழ்க்கையின் அளவுகோலாகும். எனவே, நான் இதைச் சொல்கிறேன் – இது ஒரு வகையான முரண்பாடு ஆகும் – கிறிஸ்தவ வாழ்க்கையில் மிகவும் பாதுகாப்பாக இருப்பது ஆபத்தானது. நமது சொந்த திறன் மற்றும் நமது சொந்த வசதி என்ற குறுகிய எல்லைக்குள் இருப்பது ஆபத்தானது, ஒருவருக்கு விசுவாசம் தேவையில்லை என்றால், பின்னர் நாம் வாழ்வையும், நீதியையும் அனுபவிப்பதில்லை; நாம் தொடர்ந்து நம் விசுவாசத்தை நீட்டி, நீதியின் வாழ்க்கையை விசுவாசத்தில் தொடர்ந்து வாழ்வதற்காக தேவன் நம் வாழ்க்கையை ஏற்பாடு செய்வார்.
சரி, இன்றைக்கு நமது நேரம் முடிந்துவிட்டது, ஆனால் நாளை இந்த நேரத்தில் மீண்டும் உங்களுடன் வருவேன். நாளை நான் விசுவாசத்துக்கு எதிரானதைக் கையாள்வேன், அதுதான் அவிசுவாசம். அவிசுவாசத்தின் ஆபத்தைப் பற்றி உங்களுக்கு சில தீவிர எச்சரிக்கைகளை நான் தருகிறேன்.
குறியீடு: RP-R028-104-TAM









