விசுவாசத்துக்கும் நம்பிக்கைக்கும் உள்ள வேறுபாடு

டெரெக் பிரின்ஸ்
Published: 1979
Last Updated: ஆகஸ்ட் 2026
Read Time: 9
டெரெக் பிரின்ஸின் 'விசுவாசத்திற்கும் நம்பிக்கைக்கும் உள்ள வேறுபாடு' என்ற போதனையில், இவ்விரண்டிற்கும் இடையிலான முக்கியத்துவத்தை ஆராயுங்கள். விசுவாசம் தேவனுடைய வார்த்தையின் மூலம் நம்மை நித்திய உலகோடு இணைக்கிறது. வேதாகமத்தின் அடிப்படையிலான நம்பிக்கை, தேவனிடமிருந்து வரும் நன்மையை எதிர்பார்க்கும் உறுதியைத் தருகிறது. 'விசுவாசம், பகுதி 3' தொடரில் இணைந்து, கர்த்தருடைய வாக்குத்தத்தங்களைப் பெற்றுக்கொள்ள இக்கருத்துக்கள் எவ்வாறு உதவுகின்றன என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள்.
Transcript
இன்று மீண்டும் உங்களுடன் இருப்பது நல்லது, சுருக்கமான, பரிச்சையமான ஐந்து எழுத்துக்களின் வார்த்தையான விசுவாசம் என்பதில் இருக்கிற உற்சாகமான மற்றும் வரம்பற்ற திறனை நாம் தொடர்ந்து இணைந்து ஆராய்வோம்.
நேற்று நான் விசுவாசத்துக்கும், பார்ப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை விளக்கினேன், அல்லது பொதுவாக, விசுவாசத்துக்கும் நமது உடல் உணர்வுகளுக்கும் (புலன்களுக்கும்) இடையே உள்ள வேறுபாட்டை விளக்கினேன். நம் புலன்கள் நாம் காணுகின்ற பொருள் சார்ந்த, கால/நேர உலகத்துடன் தொடர்புபடுத்துகின்றன, ஆனால், விசுவாசம் நம்மை கண்ணுக்கு தெரியாத, நித்திய உலகத்துடன் தொடர்புபடுத்துகிறது.
இந்த கண்ணுக்குத் தெரியாத, நித்திய உலகில் விசுவாசத்தின் இரண்டு முதன்மையான பொருள்கள் உள்ளன: முதலில், தேவன்தாமே ஆவார்; இரண்டாவது, தேவனுடைய வார்த்தை. முழு பிரபஞ்சத்திற்கு பின்னால் உள்ள படைப்பின் சக்தி தேவனுடைய வார்த்தை என்பதை விசுவாசம் புரிந்துகொள்கிறது. கண்ணுக்குத் தெரியாத அனைத்திற்கும் பின்னால் கண்ணுக்கு தெரியாத ஒன்று இருக்கிறது.
இன்று, பலருக்குத் தெளிவாகப் புரியாத மிக முக்கியமான வேறுபாட்டை நான் விளக்கப் போகிறேன். விசுவாசத்துக்கும் நம்பிக்கைக்கும் உள்ள வேறுபாடு. இந்த வேறுபாட்டைப் புரிந்துகொள்ளத் தவறுவது பெரும்பாலும் தேவனுடைய பிள்ளைகளின் வாழ்க்கையில் விரக்திக்கு வழிவகுக்கிறது. பலர் தங்களுக்கு விசுவாசம் இருப்பதாக நினைக்கிறார்கள், ஆனால் உண்மையில் அவர்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. தேவன் விசுவாசத்துக்கு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட முடிவுகளை நம்பிக்கைக்கு வாக்குப்பண்ணவில்லை. எனவே, விசுவாசத்துக்கும், நம்பிக்கைக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் ஒவ்வொருவரும் தெளிவாகப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது.
முதலில், நான் நம்பிக்கையை வரையறுக்க வேண்டும் என்று நினைக்கிறேன் – குறைந்தபட்சம் சுருக்கமாக. நம்பிக்கை என்பது, வேதத்தில், ஒரு நல்ல அர்த்தத்தில், தேவனிடமிருந்து நன்மைக்காக நிலையான, தொடர்ச்சியான எதிர்ப்பார்ப்பாகும். நம்பிக்கை என்பது, வேதத்தில், ஒரு நல்ல அர்த்தத்தில், தேவனிடமிருந்து ஒருபோதும் பிரிந்து இருக்க முடியாது. இது தேவனிடமிருந்து நன்மைக்காக நிலையான, தொடர்ச்சியான எதிர்ப்பார்ப்பாகும். அது வெறும் விருப்பமுள்ள யோசனையல்ல. நான் அளித்த அந்த விளக்கத்திற்கு பதிலளிக்காத மக்கள் மகிழ்விக்கும் நம்பிக்கைகள் நிறைய உள்ளன, எனவே, நம்பிக்கையின் தன்மையையும், விசுவாசத்தின் தன்மையையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
1 கொரிந்தியர் 13:13இல், பவுல் சொல்கிறார்,
` 13 இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது.
எனவே, கிறிஸ்தவ வாழ்வின் மூன்று நிலைத்திருக்கும் உண்மைகள் விசுவாசம், நம்பிக்கை மற்றும் அன்பு ஆகியவையாகும். விசுவாசத்தையும், நம்பிக்கையும் ஒன்றோடொன்று நெருக்கமாக இணைக்கப்பட்டிருப்பதை நாம் காண்கிறோம்; ஒரு குறிப்பிட்ட அர்த்தத்தில், நம் வாழ்க்கையில் அவர்களின் விளைபொருள் அன்பு என்று சொல்லலாம்.
நேற்று நாம் பார்த்த எபிரெயர் 11 ஆம் அதிகாரத்தின் முதல் வசனத்தில் விசுவாசமும், நம்பிக்கையும் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன. நேற்று, வசனத்தின் இரண்டாம் பகுதியை முக்கியமாகப் பார்த்தோம்; இன்று, வசனத்தின் முதல் பகுதியை முக்கியமாக கவனம் செலுத்தப் போகிறோம். முழு வசனத்தையும் மீண்டும் வாசிக்கிறேன்.
1 விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.
வசனத்தின் முதல் பாதியில், விசுவாசத்திற்கும், நம்பிக்கைக்கும் உள்ள தொடர்பை நீங்கள் காணலாம். விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியாயிருக்கிறது. “விசுவாசம் என்பது நம்பப்படுகிற விஷயங்களின் பொருளாகும்” அல்லது “நம்பப்படுகிற விஷயங்களின் அடிப்படை முக்கியத்துவமாகும்.” என்பது நான் நம்புகிற சிறந்த மாற்று மொழிபெயர்ப்பாகும். அதே கிரேக்க வார்த்தை, எபிரெயருக்கு எழுதின நிருப்பத்தின் தொடக்கத்தில், பொருள் அல்லது அடிப்படை முக்கியத்துவம் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது.
எனவே, விசுவாசம் என்பது நம்பப்படுகிற பொருள் சார்ந்த விஷயங்களின் அடிப்படை முக்கியத்துவமாகும். விசுவாசமும், நம்பிக்கையும் தொடர்புடையவை, ஆனால் அவை வேறுபட்டவை என்பதை இது நமக்குக் காட்டுகிறது. மேலும், நம்பிக்கையைப் பற்றிய மிக முக்கியமான ஒன்றை அது நமக்குச் சொல்கிறது. எல்லா உண்மையான நம்பிக்கையும் விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்டது. விசுவாசத்தின் அடிப்படையில் இல்லாத நம்பிக்கைகள் வெறும் ஆசைகள் மட்டுமேயாகும். ஆனால், உண்மையான நம்பிக்கை, வேதத்தின் அர்த்தத்தில், உண்மையான விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்டது; இன்னும், அவை வேறுபட்டவையாகும். வேறுபாடுகள் என்ன? நான் உங்களுக்கு இரண்டு முக்கிய வேறுபாடுகளை பரிந்துரைக்கிறேன்:
முதலில், விசுவாசம் நிகழ்காலத்தில் உள்ளது. நம்பிக்கை எதிர்காலத்தில் உள்ளது. இரண்டாவதாக, விசுவாசம் இதயத்தில் உள்ளது. நம்பிக்கை புத்தியில் உள்ளது. பாருங்கள், எபிரெய புத்தகத்தை எழுதியவர் சொல்கிறார், “விசுவாசம் என்பது பொருள் ஆகும்” (அல்லது அடிப்படை உண்மை). எனவே, விசுவாசம் என்பது ஒரு பொருள் – அது ஒரு உண்மையான ஒன்று; அது இங்கே, இப்போது நம் இதயத்தில் இருக்கிற ஒன்றாகும். ஆனால், நம்பிக்கை, அடிப்படையில், எதிர்காலத்தை நோக்கிப் பார்க்கிறது. எனவே, இதுதான் முதல் அடிப்படை வேறுபாடாகும். விசுவாசம் நிகழ்காலத்தில் இருக்கிறது. நம்பிக்கை எதிர்காலத்தைப் பார்க்கிறது. இரண்டும் சரியானது, ஆனால் ஒவ்வொன்றும் மற்றொன்றுக்கு மாற்றானது அல்ல.
மீண்டும், விசுவாசம் இதயத்தில் அமைந்திருக்கிறது. நம்பிக்கை புத்தியில் இருக்கிறது. இது மிகவும் தெளிவானது, மிகவும் முக்கியமானது. ரோமர் 10:10இல், பவுல் கூறிகிறார்:
10 நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும்….
எனவே, இதயம்தான் நாம் நம்பும் இடமாக இருக்கிறது. அந்த வகையான விசுவாசத்தில்தான் நீதி உண்டாகிறது. பல மனிதர்கள், அறிவார்ந்த கருத்துக்களைக் கொண்டுள்ளார்கள், கோட்பாட்டிற்கு அறிவார்ந்த ஒப்புதலை வழங்குகிறார்கள்; ஆனால் அது அவர்களின் இதயத்தில் இல்லை, மேலும், அது அவர்கள் வாழும் முறையை மாற்றாது. இதய விசுவாசம் நீதியை உருவாக்குகிறது. ஒரு நபர் தனது இதயத்தால் நம்புகிறாரா அல்லது அவரது புத்தியால் நம்புகிறாரா என்பதை நாம் அறியும் வழிகளில் இதுவும் ஒன்றாகும். பாருங்கள், பிரச்சனை என்னவென்றால், நாம் இந்த விஷயங்களை மாற்றி, அவற்றை தவறான இடத்தில் கொண்டு வருகிறோம். புத்தியில் உள்ள விசுவாசம் தேவன் வாக்குத்தத்தம் பண்ணினதை செய்யாது. இதயத்தில் உள்ள விசுவாசமே தேவன் வாக்குத்தத்தம் பண்ணினதின் பலனைத் தருகிறது. பின்னர், பவுல் 1 தெசலோனிக்கேயர் 5:8இல் கூறுகிறார்:
8 பகலுக்குரியவர்களாகிய நாமோ தெளிந்தவர்களாயிருந்து, விசுவாசம் அன்பு என்னும் மார்க்கவசத்தையும், இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைச்சீராவையும் தரித்துக்கொண்டிருக்கக்கடவோம்.
கிறிஸ்தவர்களின் ஆயுதங்களைப் பற்றி பவுல் இங்கே பேசுகிறார். பின்னர், அவர் ஆயுதத்தின் இரண்டு குறிப்பிட்ட பொருட்களைப் பற்றி பேசுகிறார்; மார்க்கவசம் மற்றும் தலைச்சீரா (தலைக்கவசம்). வெளிப்படையாக, மார்க்கவசம் இதயத்துடன் தொடர்புடையது, மேலும் மார்க்கவசமானது விசுவாசம் மற்றும் அன்பாகும்.
அதற்கு சமமாக, தலைச்சீரா தலையுடன் தொடர்புடையது – அதுதான் புத்தி. மேலும், தலைச்சீரா என்பது நம்பிக்கையாகும். எனவே, மீண்டும், விசுவாசம் என்பது இதயத்தின், மார்பகத்தின் தளத்தில் உள்ளது என்பதும்; நம்பிக்கை என்பது தலையில், புத்தியின் தளத்தில் உள்ளது என்பதும் வேதவசனத்திலிருந்து நமக்கு உறுதியாகிறது.
எனவே, விசுவாசத்துக்கும், நம்பிக்கைக்கும் இடையிலான வேறுபாட்டின் இரண்டு முக்கிய விஷயங்கள் இவையாகும். விசுவாசம் தற்போதைக்குரியது. நம்பிக்கை எதிர்காலத்துக்குரியது. விசுவாசம் இதயத்தில் உள்ளது. நம்பிக்கை புத்தியில் உள்ளது. விசுவாசம் என்பது தற்பொழுதுக்குரியது, அது ஒரு பொருளாகும் என்று நான் கூறி வருகிறேன். யாரோ ஒருவர் ஆங்கிலத்தில் மூன்று “ஃப்”(F)கள் கொண்ட வார்த்தைகளான உண்மை (Fact), விசுவாசம் (Faith) மற்றும் உணர்வு (Feeling) இருப்பதாகக் கூறி, அதை நன்றாக வெளிப்படுத்தியுள்ளார். அந்த வரிசைப்படி செல்லுவோம். உண்மைகள் தேவனுடைய வார்த்தையில் உள்ளன. விசுவாசம் அந்த உண்மைகளை அடிப்படையாகக் கொண்டது. உணர்வு விசுவாசத்துக்கு ஏற்ப வருகிறது. ஆனால், நாம் அவற்றை தவறான வரிசையில் வைத்தால், உணர்வுடன் தொடங்கும், நம் உணர்வுகள் மிகவும் மாறுபடும். அவை நாளுக்கு நாள், நிமிடத்துக்கு நிமிடம் மாறுகின்றன. அவை நம் புலன்கள் போன்றவை. அவை நம்மை நிரந்தரமான ஒன்றோடு தொடர்புபடுத்தாது. எனவே, தங்கள் உணர்வுகளின்படி வாழ்பவர்கள் நிலையற்ற மனிதர்கள் ஆவார்கள். அவர்கள் மேலும், கீழும், உள்ளே, வெளியே போன்று இருக்கிறார்கள். விசுவாசத்தின் ஒரே அடிப்படை உண்மையாகும். அந்த உண்மைகள் தேவனுடைய வார்த்தைகளே ஆகும். இவை ஏற்கனவே சொல்லப்பட்டன. அவை ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளன. அவைகள் மீது விசுவாசம் கட்டப்பட்டது. எனவே, விசுவாசம் தற்போதைக்குரியது. நாம் தேவனுடைய வார்த்தையிலிருந்து அறிந்ததுபோலவே, விசுவாசம் உண்மைகளுடனும், தேவனுடைய செயல்களுடனும் நம்மை தொடர்புபடுத்துகிறது. இது வரலாற்றின் அடிப்படையில் கட்டப்பட்டது. கிறிஸ்தவம் ஒரு வரலாறுக்கொண்ட மதம் என்பதை உணர வேண்டியது அவசியமானது. இது வெறும் கோட்பாடு அல்ல, இது ஒரு தத்துவம் மட்டுமல்ல, ஆனால் அது மனித வரலாற்றில் நடந்த நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு மதம் ஆகும். மேலும், விசுவாசம் அந்த நிகழ்வுகளுடன் தொடர்புடையது; இது உண்மைகள் மற்றும் தேவனுடைய செயல்களுடன் தொடர்புடையது.
எபிரெயர் 12:1 இல், இயேசு இரண்டு விஷயங்களால் அழைக்கப்படுகிறார்: நமது விசுவாசத்தை துவக்குகிறவர் மற்றும் முடிக்கிறவர். துவக்குகிறவராக, இயேசு நம்முடைய விசுவாசத்திற்கு அடித்தளம் அமைத்தார். முடிக்கிறவராக, அவர்தான் அதை முடிக்கப்போகிறார், அவர் தொடங்கியதை முடிக்கப்போகிறார். மற்றொரு இடத்தில், எபிரெயர் 3:1 இல், நாம் அறிக்கைப்பண்ணுகிற அப்போஸ்தலரும், பிரதான ஆசாரியரும் என்று அழைக்கப்படுகிறார். இன்னொரு வகையில் அதே உண்மையைதான் குறிக்கிறது. அப்போஸ்தலராக, அவர் தேவனிடமிருந்து வந்தவர், நம்முடைய விசுவாசத்திற்கான அடிப்படையை நமக்குக் கொடுக்க வேண்டியதைச் செய்தார். நம்முடைய பிரதான ஆசாரியராக, அவர் தேவனிடத்திலும், தேவனுடைய பிரசன்னத்துக்கும் திரும்பியவர். அவர் இப்போது நம்மை பிரதிநிதித்துவப்படுத்துகிறார், இதனால் அவர் நம்முடைய அப்போஸ்தலராக ஆரம்பித்த வேலையை முடிப்பார்.
எனவே, விசுவாசம் நம்மை இயேசுவோடு, துவக்குகிறவர் மற்றும் அப்போஸ்தலர் என்ற தகுதியில் தொடர்புபடுத்துகிறது. அவர் நம்முடைய விசுவாசத்தைத் தொடங்கியவர், அஸ்திபாரம் போட்டவர், இரட்சிப்பை வழங்குவதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்தவர் ஆவார்.
ஆனால், நம்பிக்கை நம்மை இயேசுவோடு நம்முடைய விசுவாசத்தை முடிப்பவராகவும், நம்முடைய பிரதான ஆசாரியராகவும் தொடர்புபடுத்துகிறது. பரலோகத்தில் தம்முடைய ஜெபத்தினாலும், பரிந்துபேசுகிற ஊழியத்தினாலும், பூமியில் நமக்காகத் தம்முடைய அப்போஸ்தலப் பணியின் மூலம் அவர் தொடங்கியதை இப்போது நம்மில் நிறைவு செய்வார்.
எனவே, விசுவாசம் இயேசு செய்தவற்றின் அடிப்படையில் அமைந்துள்ளது. நம்பிக்கை இயேசு என்ன செய்வார் என்பதை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
ஆனால், இன்று இந்த பேச்சை முடிப்பதற்கு முன், நாம் எந்த வகையிலும் நம்பிக்கையை சிறுமைப்படுத்தவில்லை என்பதை மட்டும் வலியுறுத்த விரும்புகிறேன். நாம் அதை நம்பிக்கையிலிருந்து வேறுபடுத்துகிறோம். கிறிஸ்தவ வாழ்க்கையில் நம்பிக்கை மிக மிக முக்கியமானது; அது புத்தியின் தலைக்கவசமாகும். மனச்சோர்வு, பதட்டம் மற்றும் பயம் ஆகியவற்றிலிருந்து நம் புத்தியைப் பாதுகாக்கிறது.
பாருங்கள், நம்பிக்கை ஒரு உறுதியான வேத அடிப்படையைக் கொண்டிருக்க வேண்டும். இல்லையெனில் அது வெறும் ஆசையுள்ள சிந்தனையாயிருக்கும். எல்லா நம்பிக்கைக்கும் ஒரு போதிய வேத அடிப்படை உள்ளது. அது ரோமர் 8:28 ஆகும்:
28 அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.
இப்போது, நாம் தேவனை நேசித்து, அவருடைய அழைப்புக்கும், நம் வாழ்க்கைக்கான அவரது நோக்கத்திலும் நாம் நடந்து, இவ்வாறு நாம் அந்த நிபந்தனைகளை சந்தித்தால், பின்னர், நமக்கு நடக்கிற அனைத்தும், தேவன் ஒன்றாகச் செயல்பட வைக்கிறார் என்பதை நாம் அறிவோம். எனவே, அவநம்பிக்கைக்கு எந்த அடிப்படையும் இல்லை. எப்போதும் இதுவே நமது நம்பிக்கையின் அடிப்படையாகும். இது தேவனுடைய நற்குணத்தில் இருக்கும் நமது விசுவாசமாகும்; இந்த நம்பிக்கை நம் புத்தியை பாதுகாக்கிறது. இது நம்மை மனச்சோர்விலிருந்தும், மனநிலையிலிருந்தும், மேலும் கீழும் செல்லுகிற காரியத்திலிருந்தும் காக்கிறது.
எனவே, ஒவ்வொன்றும் அதன் செயல்பாட்டைக் கொண்டுள்ளது என்பதை நாம் காணலாம். விசுவாசம் இதயத்தில் இருக்கிறது; அதுதான் மார்க்கவசமாகும். நம்பிக்கை புத்தியில் இருக்கிறது; அதுதான் தலைக்கவசமாகும்.
சரி, இன்றைக்கு நம் நேரம் முடிந்துவிட்டது. ஆனால், நாளை இந்த நேரத்தில் நான் மீண்டும் உங்களுடன் வருவேன்.
விசுவாசம் மிகவும் முக்கியமானது என்பதற்கான மற்றொரு முக்கிய காரணத்தை நாளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அது மட்டும்தான் நீதியுள்ள வாழ்க்கைக்கு அடிப்படையாகும்.
குறியீடு: RP-R028-103-TAM









