நேற்று நான் உங்களுடன் புதிய உடன்படிக்கையின் வாழ்க்கை முறையாகிய கொய்னோனியாவை பற்றி பேசினேன். இது தேவனுடைய மக்களிடையே, வெளிச்சத்தில் நடத்தப்படும் பரஸ்பர அர்ப்பணிப்பின் வாழ்க்கை ஆகும்.

இன்று இந்த சிறப்பு வாழ்க்கை முறையை அடையாளப்படுத்தும் மற்றும் நிலைநிறுத்தும் தனித்துவமான ஒரு புதிய ஏற்பாட்டு கட்டளை அல்லது சடங்கை பற்றி நான் பேசப் போகிறேன். பல நூற்றாண்டுகளாக தேவனுடைய மக்கள் இதற்கு பல்வேறு பெயர்களை வைத்துள்ளனர். சிலர் இதை நற்கருணை என்கிறார்கள், மற்றவர்கள் திருவிருந்து, ராப்போஜனம், அப்பம் பிட்குதல் அல்லது கர்த்தருடைய பந்தி என்று அழைக்கிறார்கள். இன்று நாம் பயன்படுத்தும் பெயர் முக்கியமில்லை.

இன்று எனது செய்தியில், இந்த ஒழுங்குமுறைக்கும் கிறிஸ்தவ நம்பிக்கையின் அடிப்படையிலான உடன்படிக்கைக்கும் இடையே உள்ள நேரடி தொடர்பை நான் உங்களுக்குக் காட்ட விரும்புகிறேன். நான் அதை ஒரு உடன்படிக்கையின் உணவாக உங்களுக்கு சித்தரிக்க விரும்புகிறேன். இயேசு நற்கருணை அல்லது திருவிருந்து அல்லது கர்த்தருடைய இராப்போஜனத்தை ஒரு பந்தியின் போது ஏற்படுத்தினார் என்பதை நாம் நினைவில் கொள்கிறோம். அதனால்தான் இது கர்த்தருடைய பந்தி என்று அழைக்கப்படுகிறது. அவர் தம் சீடர்களுடன் சேர்ந்து சாப்பிட்ட பாஸ்கா விருந்துக்குப் பிறகு, அவர் இரவு உணவு மேசையில் இருந்த இரண்டு எளிய பொருட்களான அப்பம் மற்றும் திராட்சைரசம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு, இந்த புனிதமான மற்றும் கனமான கட்டளையை நிறுவுவதற்கு அந்த இரண்டு பொருட்களை பயன்படுத்தினார். மத்தேயு 26ம் அதிகாரம் வசனங்கள் 26-28இல் இயேசு என்ன செய்தார் என்பது விவரிக்கப்பட்டிருக்கிறது:

26 அவர்கள் போஜனம் பண்ணுகையில், இயேசு அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, சீஷர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார். 27 பின்பு, பாத்திரத்தையும் எடுத்து ஸ்தோத்திரம்பண்ணி, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்; 28 இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது.

அப்பம் மற்றும் திராட்சரசத்தின் என்கிற எளிய பொருட்களை தன் சீஷருடன் பரிமாற்றினதின் மூலம், அவர்களுடன் அவர் புதிய உடன்படிக்கையில் பிரவேசித்தார் என்பதைக் கவனியுங்கள். அந்த உடன்படிக்கையை அவர் நிறுவிய விதம் இதுதான். மூல பாஷையில் "உடன்படிக்கை" என்ற வார்த்தையும் "ஏற்பாடு" என்ற வார்த்தையும் ஒன்றுதான் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். எனவே நாம் புதிய ஏற்பாட்டைப் பற்றி பேசும்போது புதிய உடன்படிக்கையைப் பற்றி பேசுகிறோம். இயேசுவுக்கும் அவருடைய சீஷர்களுக்கும் இடையில் இப்படித்தான் புதிய உடன்படிக்கை துவங்கப்பட்டது. எனவே, இது இயேசுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட அனைவருக்கும் மிகவும் கனமான, குறிப்பிடத்தக்க மற்றும் முக்கியமான நிகழ்வு.

அதன் நோக்கங்கள் என்ன? அவற்றை மூன்று வார்த்தைகளில் வெளிப்படுத்தலாம் என்று நான் பரிந்துரைப்பேன்: நினைவூக்கூறுதல், தொடர செய்தல், புதுப்பித்தல். “என்னை நினைவுக்கூறும்படி இதைச் செய்யுங்கள்” என்று இயேசு சொன்னார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உடன்படிக்கை எவ்வாறு துவங்கப்பட்டது என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். இந்த உறவு எங்கிருந்து துவங்கியது என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். அதை மறக்கவே கூடாது.

இரண்டாவது நோக்கம், அதை நிலைநிறுத்துவதாக இருந்தது. அதை அவர்கள் எப்போதும் தங்கள் முன் நிறுத்த வேண்டும். அது, இயேசுவுக்கும் அவருடைய சீஷர்களுக்கும், சீஷர்களுக்கு தங்கள் இடையிலும் இடைவிடாத ஒரு தொடர் உறவாக நிலைநிறுத்துவதாகும்.

மூன்றாவதாக, இது புதுப்பிக்கும் செயல்பாட்டைக் கொண்டுள்ளது என்று நான் நம்புகிறேன். நம்முடைய கிறிஸ்தவ அனுபவத்தில் சில சமயங்களில் நாம் தேவனுடைய அளவுகோள்களில் இருந்தும், தேவனுடைய நிபந்தனைகளில் இருந்தும் நழுவத் தொடங்குகிறோம் என்று நான் நம்புகிறேன். இந்த உடன்படிக்கை உணவு எதைப் பற்றியது, அதன் விலை என்ன, இயேசு நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை நினைப்பூட்டுவதின் மூலம், தேவன் நம்மை தம்முடைய அளவுகோல்களுக்கு திரும்ப செய்கிறார். இந்த உடன்படிக்கை உணவின் விளைவுகள் என்ன? அந்த காலங்களில், மத்திய கிழக்கு தேசங்களில் உடன்படிக்கையின் உணவு புதிதல்ல என்பதை நான் உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். பல நூற்றாண்டுகளாக மத்திய கிழக்கு மக்கள் மத்தியில், ஒரு மனிதனுடன் அப்பம் சாப்பிடுவதும், ஒரே கோப்பையைப் பகிர்ந்து கொள்வதும் அவர்களுக்குள் மிகவும் கனமான மற்றும் புனிதமான அர்ப்பணிப்பைச் செய்வதாக புரிந்து கொள்ளப்பட்டது.

1948 ஆம் ஆண்டு இஸ்ரேல் அரசு உருவாகி, இஸ்ரேலைச் சுற்றியுள்ள அரேபியர்களுக்கும் யூதர்களுக்கும் இடையே போர் மூண்டபோது, எருசலேம் மற்றும் அதைச் சுற்றி நடந்த நிகழ்வுகளை விவரிக்கும் "ஓ, எருசலேம்" என்கிற புத்தகத்தில் காணப்படும் ஒரு உண்மைக் சம்பவத்தின் மூலம் இதை நான் விளக்க விரும்புகிறேன். இந்தக் கதையை "ஓ, ஜெருசலேம்" என்ற புத்தகத்தின் 29வது அத்தியாயத்தில் காணலாம்.

எருசலேமுக்கு சற்று தெற்கே [தற்செயலாக, நான் அந்த நேரத்தில் எருசலேமில் இருந்தேன், இந்த விஷயங்களில் பலவற்றை நான் நேரில் பார்த்தவன் என்பதையும் சேர்த்துக் கொள்கிறேன்.] எருசலேமுக்கு தெற்கே முக்கிய யூதப் படைகளால் பாதுகாக்க முடியாத ஒரு தனிமைப்படுத்தப்பட்ட, க்ஃபார் எட்ஸியோன் என்று அழைக்கப்படும் யூத கிப்புட்ஸ் இருந்தது. இந்த கிப்புட்ஸ் யோர்தானின் இராணுவப் படையான அரேபியப் படையால் தாக்கப்பட்டு இறுதியில் பெரும் இராணுவப் படைக்கு அடிபணிந்து கிட்டத்தட்ட அழிக்கப்பட்டது. ஒரு சில யூதர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். அவர்களில் எலிசா என்ற இளம் யூதப் பெண்மணியும் ஒருவர். அரபு வீரர்கள் அவளைக் கைப்பற்றினர், அந்த நேரத்தில் இயல்பாக, அவர்கள் அவளைப் போரின் முறையான கொள்ளையாகக் கருதினர். அவர்கள் அவளை பலாத்காரம் செய்யத் திட்டமிட்டனர். அவர்கள் அவளுடைய ஆடைகளை கிழிக்க ஆரம்பித்தபோது ஒரு ஆச்சரியமான விஷயம் நடந்தது. ஒரு அரேபிய அதிகாரி நடந்து வந்து, அந்த இரண்டு வீரர்களையும் சுட்டுக் கொன்று, பின்னர் தனது பாக்கெட்டிலிருந்து ஒரு ரொட்டி துண்டை வெளியே எடுத்து, இந்த யூதப் பெண்ணிடம் கொடுத்து, "இதைச் சாப்பிடு" என்றார். அவள் ரொட்டியை சாப்பிட்டதும், “இப்போது நீ என் பாதுகாப்பில் இருக்கிறாய். உன்னை யாரும் தொட மாட்டார்கள்" என்று சொன்னார்.

அவள் ஏன் அவனுடைய பாதுகாப்பில் இருந்தாள்? ஏனென்றால் அவள் அவனுடைய ரொட்டியை சாப்பிட்டாள். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர் அவளுடன் காணக்கூடிய உடன்படிக்கையின் உறவை நிறுவினார். போர் மற்றும் காம உணர்வுகளில் கூட அந்த அரபு வீரர்கள் தங்கள் அதிகாரிக்கும் இந்த இளம் யூதப் பெண்ணுக்கும் இடையிலான அந்த உடன்படிக்கையின் உறவை மதித்தார்கள்.

இதைப் பற்றி நான் நினைக்கும் போதெல்லாம், "அந்த அரபு வீரர்கள் மற்றும் அவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்களாக இருந்தாலும், பல விதங்களில், 'அப்பம் பிட்குதல்' என்றால் என்ன என்பதை, இன்று தங்களை கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் பலரை விட மிகத் தெளிவாகப் புரிந்துகொண்டனர். ” அந்த அதிகாரிக்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையில் அப்பம் பிட்கப்பட்டவுடன், அந்த புனித உடன்படிக்கையின் சின்னத்தின் மூலம் அவர்கள் அவளுக்கு எதிராக மாறக்கூடாது, அவளை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது, அந்த உறவை மதிக்க வேண்டும் என்ற கட்டாயத்திற்குள் வந்தனர். அப்படியென்றால் நாம் ஒருவரோடொருவர் கொண்டிருக்கும் நம் உறவின் அடிப்படையில் அந்த உடன்படிக்கையின் உணவு என்பதற்கு என்ன அர்த்தம்? நான் உங்களுக்கு நான்கு வார்த்தைகளை கொடுக்கப் போகிறேன்: அர்ப்பணிப்பு, ஒற்றுமை, அன்பு மற்றும் விசுவாசம். அந்த கடைசி வார்த்தையை நான் வலியுறுத்த விரும்புகிறேன். நாம் ஒன்றாக அப்பம் பிட்டவுடன், ஒருவருக்கொருவர் விசுவாசமாக இருக்க உறுதியளிக்கிறோம்.

1 கொரிந்தியர் 11வது அதிகாரம் 23-30 வசனங்களில் காணப்படும் இந்த உடன்படிக்கையின் உணவைப் பற்றிய பவுலின் விளக்கத்திற்கு இப்போது நான் திரும்ப விரும்புகிறேன். நான் அந்த வசனங்களைப் படிக்கப் போகிறேன்:

23 நான் உங்களுக்கு ஒப்புவித்ததைக் கர்த்தரிடத்தில் பெற்றுக்கொண்டேன்; என்னவெனில், கர்த்தராகிய இயேசு தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே அப்பத்தை எடுத்து, 24 ஸ்தோத்திரம்பண்ணி, அதைப்பிட்டு: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார். 25 போஜனம்பண்ணினபின்பு, அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து: இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது; நீங்கள் இதைப் பானம்பண்ணும்போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார். 26 ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள். 27 இப்படியிருக்க, எவன் அபாத்திரமாய்க் கர்த்தருடைய அப்பத்தைப் புசித்து, அவருடைய பாத்திரத்தில் பாணம்பண்ணுகிறானோ, அவன் கர்த்தருடைய சரீரத்தையும் இரத்தத்தையும் குறித்துக் குற்றமுள்ளவனாயிருப்பான். 28 எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன். 29 என்னத்தினாலெனில், அபாத்திரமாய்ப் போஜனபானம்பண்ணுகிறவன், கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால், தனக்கு ஆக்கினைத்தீர்ப்பு வரும்படி போஜனபானம்பண்ணுகிறான். 30 இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியாதியுள்ளவர்களுமாயிருக்கிறார்கள்; அநேகர் நித்திரையும் அடைந்திருக்கிறார்கள்.

பவுல் "அநேகர் நித்திரையும் அடைந்திருக்கிறார்கள்" என்று கூறும்போது, அநேகர் அவர்களின் காலத்திற்கு முன்பே அகால மரணமடைந்துள்ளார்கள் என்ற அர்த்தத்தை வெளிப்படுத்துகிறார். இது இந்த உடன்படிக்கையின் உணவு என்ன என்பதற்கான மிகவும் புனிதமான படம். இது இயேசு தொடங்கிய உடன்படிக்கையின் நினைவுச்சின்னம். இது அவருக்கு நேரே நமக்கிருக்கும் உடன்படிக்கையின் கடமைகளையும், ஒருவருக்கொருவர் இருக்கும் கடமைகளையும் நினைப்பூட்டுகிறது. இந்த உணவை உட்கொள்வதன் மூலம், சரீரத்தை சரியாக நிதானித்து அல்லது பகுத்தறிய வேண்டும் என்று பவுல் நமக்கு நினைவூட்டுகிறார். அது வெறுமனே அப்பத்தை கர்த்தரின் சரீரம் என்று பகுத்தறிவதை அர்த்தப்படுத்துவதில்லை, அதே உடன்படிக்கையின் உணவை நம்முடன் பங்குகொள்ளும் நமது சக விசுவாசிகளையும் ஒரே உடலின் அங்கத்தினர்களாகப் பகுத்தறிவதையும் குறிக்கிறது.

1 கொரிந்தியர் 10 ஆம் அதிகாரத்தில், பவுல் ஒரு அப்பம் இருப்பதால் நாம் அனைவரும் அந்த ஒரு அப்பத்தில் பங்கு கொள்கிறோம், நாம் ஒரே உடல் என்று அது அர்த்தப்படுகிறது என்று கூறினார். எனவே சரீரத்தை பகுத்தறிவது என்பது பங்குபெறும் அனைவரின் ஒற்றுமையைக் கண்டறிவதாகும். நாம் அனைவரும் ஒரே சரீரத்தின் உறுப்புகள் என்பதையும், நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் உடன்படிக்கையின் உறவு கொண்டுள்ளோம் என்பதையும் பகுத்தறிய வேண்டும். அதாவது, நாம் அந்த உறவில் நுழைந்து, இந்த உடன்படிக்கையின் உணவில் பங்குகொள்வதன் மூலம் அதை புதுப்பித்த தருணத்திலிருந்து, நாம் ஒருவருக்கொருவர் விசுவாசமாக இருக்க அர்ப்பணித்துளோம்.

அந்த அரேபியப் படைவீரர்களைப் போலவே, அவர்களது சொந்த உணர்வுகள் இருந்தபோதிலும், அந்த யூதப் பெண்ணை மதிக்க வேண்டியிருந்தது, ஏனெனில் அவர்களின் அதிகாரி அவளுடன் அப்பம் பிட்டார். ஆகவே, நம்முடைய தனிப்பட்ட மனப்பான்மை அல்லது உணர்ச்சிகள் அல்லது உணர்வுகளைப் பொருட்படுத்தாமல், நாம் அப்பத்தை பிட்கும்போது, உடன்படிக்கையின் உணவை எடுத்துக் கொள்ளும்போது, அந்தச் செயலின் மூலம் ஒருவருக்கொருவர் விசுவாசமாக இருக்கக் கடமைப்பட்டுள்ளோம். நாம் துரோகிகளாக இருக்க முடியாது. யூதாஸின் பெரும் பாவம் சங்கீதம் 41ன் 9ம் வசனத்தில் சுருக்கமாக, தீர்க்கதரிசனமாக, "என்னுடன் அப்பம் புசித்தவனே என் மேல் தன் குதிங்காலை தூக்கினான்" என்று கூறுகிறது. அதுதான் யூதாஸின் துரோகத்தை மிகவும் பயங்கரமாக்கியது, அவர் முதலில் அப்பத்தை சாப்பிட்டார், பின்னர் யாருடன் அப்பம் புசித்தாரோ அவருக்கே துரோகம் செய்தார்.

இப்போது நான் உங்களிடம் வெளிப்படையாக கேட்க விரும்புகிறேன், கிறிஸ்தவர்களாகிய நாம் அதில் குற்றவாளிகள் அல்லவா? நாம் ஒருவரோடொருவர் அப்பம் சாப்பிட்டுவிட்டு, பின்பு ஒருவரையொருவர் எதிர்த்து குதிங்கால் உயர்த்தி, விமர்சிக்கிறோம், கதைகளை சுமக்கிறோம், மிகவும் இரக்கமற்ற முறையில் மற்றும் தரமற்ற முறையில் செயல்படுகிறோம் அல்லவா? அந்த உடன்படிக்கையின் உணவை நாம் எடுத்துக் கொள்ளும்போது இரண்டு மாற்று வழிகள் உள்ளன என்று பவுல் கூறுகிறார். சரியான உறவுகளிலிருந்து நாம் அதை எடுத்துக் கொண்டால் அது நமக்கு ஆசீர்வாதத்தையும் ஆரோக்கியத்தையும் தரும், ஆனால் நம் உறவுகள் தவறாக இருந்தால் அது நமக்கு நியாயத்தீர்ப்பு, நோய் மற்றும் மரணத்தை கொண்டு வரும். இது மிகவும் ஆழமான சிந்தனை.

ஆனால் உடன்படிக்கையின் உறவுகள் மிகவும் புனிதமான மற்றும் தீவிரமான காரியமாகும். அவற்றை இலகுவாக எடுத்துக் கொள்ளாதபடி தேவன் நம் ஒவ்வொருவருக்கும் உதவட்டும்.

லைக்
பகிரவும்